• முகப்பு
  • குற்றம்
  • 10 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவன் கஞ்சா விற்பனை செய்யும்போது காவலர்கள் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

10 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவன் கஞ்சா விற்பனை செய்யும்போது காவலர்கள் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

லட்சுமி காந்த்

UPDATED: May 22, 2024, 4:31:01 AM

Tamil News

விடியா திமுக அரசு அமைந்த நாள் முதல் தமிழகத்தில் போதைப் பொருள்களின் கலாச்சாரம் அதிகரித்து வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கமும் அதிகரித்து வருகின்றது.

காவல்துறையில் பணி செய்யும் சில காவலர்கள் இதற்கு உடந்தையாக கையூட்டு பெற்றுக் கொண்டு கஞ்சா வியாபாரிகளை ஊக்குவித்து வருகின்றனர்.

Crime News 

இது தொடர்பாக கழகப் பொதுச் செயலாளர் தொடர்ந்து அறிக்கைகளை விடுத்துக் கொண்டே உள்ளார். அதன் அடிப்படையில் மட்டுமே தமிழக அரசு அங்கொன்றும் இங்கொன்றுமாக கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்கின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  

அந்த தகவலின் அடிப்படையில் சிறுகாவேரிப்பாக்கம் பகுதிக்கு விரைந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் , சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரை ஓரம் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.

 

அவரிடம் இருந்து சுமார் ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சா இலைகள் கைப்பற்றப்பட்டது.

காவல்துறையினரின் விசாரணையில்  பிடிபட்ட அந்த வாலிபரின் பெயர் முருகன் (வயது 26) , என்றும் சிறுகாவேரிப்பாக்கம் மங்கையர்கரசி நகரில் வசிப்பவர் என்றும் கஞ்சா விற்பனையை தொழிலாகவே செய்து வருகிறார் என்றும்,

ஏற்கனவே சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஐந்து வழிப்பறி வழக்குகளும் , 3 கஞ்சா வழக்குகளும் ,உத்திரமேரூர் பகுதியில் ஒரு வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் உள்ளது விசாரணை தெரியவந்தது.

பிடிப்பட்ட முருகன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மத்திய புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

 

VIDEOS

Recommended