படப்பை அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசாங்க நிலத்தை சீர்படுத்தும் சமூக விரோதிகள்
லட்சுமி காந்த்
UPDATED: May 19, 2024, 12:24:30 PM
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் என்ற பகுதியில் துண்டல் கழனி என்ற பகுதியில் சுமார் 30 ஏக்கர் நிலம் 1988 ஆம் ஆண்டு அப்போதைய கவர்னர் அலெக்சாண்டர் அவர்களால் காட்டு மரங்கள் வளர்க்க முடிவெடுக்கப்பட்டு புங்கை, புளி, மா, மூங்கில் ,நாவல், தேக்கு உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிப்பு செய்து வருகின்றார்கள்.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் அங்கு வளர்க்கப்பட்ட மரங்கள் நன்றாக பராமரிக்கப்பட்டது.
திமுக ஆட்சி அமைந்த நாளிலிருந்து கரசங்கால் பகுதியில் உள்ள துண்டல் கழனி பராமரிப்பு இன்றி கைவிடப்பட்டது . அதனால் சமூக விரோத கும்பல்கள் உள்ளே சென்று கஞ்சா அடிப்பதும் மதுபானம் அருந்துவதும் பாலியல் தொழில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் சில மாத காலமாக தனியார் கம்பெனியில் சேர்கின்ற கழிவுநீர்களை லாரி மூலம் கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் கிணறு போலயே பள்ளம் தோண்டி அதில் ஊற்றிவிட்டு சென்றுவிடுகின்றார்கள். மேலும் ஏற்கனவே அங்கு உள்ள கிணற்றிலும் கழிவுநீரை ஊற்றிவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் மணிமங்கலம் கரசங்கால் கீழ் படப்பை போன்ற பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசு ஏற்படுகின்றது. அந்த தண்ணீரை குடிக்கும்போது தொண்டை வலி போன்ற உபத்திரங்களும் , குளிக்கும் போது தோல் அரிப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கரசங்கால் பகுதியில் திமுக கட்சியின் ஊராட்சி மன்றத் தலைவராக சுதாகர் , துணைத் தலைவராக தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளார்கள். இவர்கள் ஏதோ காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு அந்த இடத்தை பராமரிக்காமல் வேண்டுமென்றே விட்டு வைப்பதாக கூறப்படுகிறது.
சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த 30 ஏக்கர் நிலத்தினை திமுக அரசு ஏன் பராமரிக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கரசங்கால் பகுதியில், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது அலுவலகங்கள் வந்தால் படப்பை ஊராட்சி பின்தங்கி விடுமோ என்ற பயத்தினால் திமுக அரசு இது பேன்ற நல்ல செயல்களை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
எப்படி இருந்த போதிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தினை சமூகவிரோதிகள் நாசப்படுத்த வாய்ப்பு அளிக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் வேண்டுகின்றனர்.