கேரள லாட்டரி சீட்டு விற்பனை -4 பேர் கைது.

கண்ணன்

UPDATED: Nov 18, 2024, 8:19:59 PM

திண்டுக்கல் மாவட்டம்

பழனி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பழனி ஆயக்குடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக ஆயக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கேரள லாட்டரி

இதையடுத்து,பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் உத்தரவுப்படி, ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் சார்பு ஆய்வாளர் ஆனந்த் மற்றும் காவலர்கள் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, பழனி அருகே உள்ள ஆயக்குடி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரளா லாட்டரிகளை விற்பனை செய்து கொண்டிருந்த பழைய ஆயக்குடி பாண்டிய வேளாளர் தெருவை சேர்ந்த கார்த்தி

Latest Dindigul District News

நத்தம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் ; பழைய ஆயக்குடி மேற்குரத வீதியை சேர்ந்த நாச்சிமுத்து மற்றும் பழனி அடிவாரம் மதனபுரம் பகுதியை சேர்ந்த மணி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரின் மீது வழக்கு பதிவு செய்து பழனி கிளை சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended