• முகப்பு
  • குற்றம்
  • காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்து, பள்ளி , கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா அமோக விற்பனை.

காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்து, பள்ளி , கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா அமோக விற்பனை.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 16, 2024, 6:14:43 AM

கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கமும் அதிகரித்து வருகின்றது.

காவல்துறையில் பணி செய்யும் சில காவலர்கள் இதற்கு உடந்தையாக கையூட்டு பெற்றுக் கொண்டு கஞ்சா வியாபாரிகளை ஊக்குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மையப் பகுதியான மூங்கில் மண்டபம் அருகே உள்ள வள்ளல் பச்சையப்பன் தெருவில் பிரபல ரவுடியான ராஜசேகர் (வயது 30) என்பவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருகிறார்.

சமீபகாலமாக மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமை ஆவதாக தகவல் பரவியதுயடுத்து பல பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது .

இந்நிலையில் ஒரு ரவுடி ஒருவர் மூங்கில் மண்டபம் பகுதியில் வள்ளல் பச்சையப்பன் தெருவில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வருகிறார் என்ற ரகசிய தகவல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்தது.  

அந்த தகவலின் அடிப்படையில் நகரின் மையப் பகுதியில் வசித்து வரும் ராஜசேகரின் வீட்டுக்குள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சண்முக வடிவு, உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட காவல்துறையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து அனைத்து இடங்களையும் சல்லடை சல்லடையாக தேடிப் பார்த்ததில் வீட்டின் உள்ளே ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கிலோ எடையுள்ள கஞ்சா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

ராஜசேகரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில், கைது செய்யப்பட்ட ராஜசேகர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

ராஜசேகர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

பொதுவாக போதைப் பொருட்களின் நடமாட்டம் புறநகர் பகுதியில் தான் விற்பனை செய்யப்படும் என்ற கருத்து ராஜசேகர் விசயத்தில் தலைகீழாக மாறிவிட்டது .

காஞ்சிபுரத்தின் இருதய பகுதி என கூறப்படும் மூங்கில் மண்டபம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended