உயர்ரக பைக் திருட்டு, கண்காணிப்பு கேமரா புட்டேஜ்யை சிவகாஞ்சி காவல் நிலையத்தில் அளித்தும் வழக்கு பதிவு செய்ய மறுத்து 9 மணி நேரம் அலைக்கழித்த அவலம்.
லட்சுமி காந்த்
UPDATED: May 8, 2024, 7:02:10 AM
காஞ்சிபுரத்தில் திருடு போன இருசக்கர வாகனம்
காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் அருகே வைத்தியர் தெருவில் வசிப்பவர் ஸ்ரீதர் விமலா தம்பதிகள். இவர்களுக்கு சூரியகுமார், வசந்தகுமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இருவரும் டிப்ளமோ படித்துவிட்டு பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
சூரியகுமார் கடந்த 5 வருடத்திற்கு முன்பு (பல்சர்) ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்.
இவருடைய வீடு காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி உள்ளது.
காஞ்சிபுரத்தில் உயர்ரக பைக் திருட்டு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு வந்த சூரியகுமார் வீட்டின் வெளியே பைக் நிறுத்தி பூட்டிவிட்டு தூங்க சென்று விட்டார். விடியற்காலையில் வீட்டின் வெளியே வந்து பார்க்கும்போது இவருடைய பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி உற்றார்.
இது தொடர்பாக பக்கத்து வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதில் ஒரே பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள் சூரிய குமாரின் பைக்கின் லாக்கை உடைத்துவிட்டு திருடி கொண்டு சென்றது தெரியவந்தது.
அந்த மூன்று மர்ம நபர்களில் ஒரு இளைஞன் சூரிய குமாரின் பல்சர் பைக்கை டிஎஸ்பி அலுவலகம் வழியாக ஏகாம்பரநாதர் கோவில் மதில் சுவரையொட்டி தள்ளிக் கொண்டு ஓடுகிறார்.
அந்த நபரின் பின்னாடி நோட்டமிட்டவாறே அவருடைய நண்பர்கள் இருவர் மற்றொரு பைக்கில் செல்கின்றார்கள். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
சூரியகுமாரின் வீட்டின் அருகே டிஎஸ்பி அலுவலகமும் மற்றொரு புறத்தில் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் உள்ள நிலையில், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் பைக் காணவில்லை என புகார் அளித்தார்.
ALSO READ | லஞ்சம் பெற்ற அலுவலர் கையும் களவுமாக கைது.
முதலில் புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள் என நேற்று காலை 9 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை சுமார் 9 மணி நேரம் அலைகழித்த பின்னர் புகாரை பெற்றுக் கொண்டனர்.
காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அருகே சுமார் 10 மீட்டர் தூரத்தில், வீட்டின் வாசலில் லாக் செய்த பைக்கையே, மர்ம நபர்கள் திருடி கொண்டு சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.