ஆன்லைன் டெலிவரி ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய போதை ஆசாமிகள்.

சண்முகம்

UPDATED: Oct 29, 2024, 6:43:33 PM

கடலூர் மாவட்டம்

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீமுஷ்ணம்- விருத்தாசலம் சாலையில் சாத்தமங்கலம் பகுதியில் விருத்தாசலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஆன்லைன் டெலிவரி ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவர் விருத்தாசலத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பொருட்களை டெலிவரி செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சாத்தமங்கலம் கிராம பகுதியில் மெயின் ரோட்டில் போதையோடு நின்றிருந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கையில் இரும்பு ராடுடன் ராதாகிருஷ்ணனின் இருசக்கர வாகனத்தை அடித்து நிறுத்தினர்.

அப்போது அவரை தலை, இடுப்பு, கை உள்ளிட்ட பல இடங்களில் தாக்கிய போதை ஆசாமிகள் 5000 ரூபாய் பணத்த கொடுடா என்று மிரட்டி பணத்தைக் கேட்டுள்ளனர்.

அப்போது தன்னிடம் பணம் இல்லை என்று ராதாகிருஷ்ணன் கூறவே மேலும் தாக்கிய அவர்கள் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் இருந்த காரணத்தினால் அவரை அடித்துப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மயக்கம் அடைந்த ராதாகிருஷ்ணன் அவ்வழியாக சென்றவர்களின் உதவியோடு ஸ்ரீமுஷ்ணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் தன்னிடம் பணம் கேட்டு போதை ஆசாமிகள் மிரட்டல் விடுத்து கடுமையாக இரும்பு ராடால் தாக்கியுள்ளனர் என்று குறிப்பிடுகிறார்.

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளது எனவும், மேலும் போதை ஆசாமிகளின் அலப்பறைகளும் பொதுமக்களுக்கு அவர்களால் ஏற்படும் இடையூறுகளும் அதிகமாக இருந்து வருகிறது எனவும், இதனை தடுக்க வேண்டும், மூலைக்கு மூலை கஞ்சா, போதை பொருட்கள், மது தங்கு தடை இன்றி கிடைப்பதால் போதை ஆசாமிகள் தெருவுக்குத் தெரு அதிகரித்து விட்டனர் எனவும்,

இதனால் பாதிக்கப்பட்டு வேதனை அடைவது பொதுமக்கள் தான் எனவும் இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended