Colombo - பொதுச் சுகாதார பரிசோதகரை சுட்டுக்கொன்ற நபர் கைது
அஷ்ரப். ஏ. சமத்
UPDATED: Jul 4, 2024, 7:38:55 AM
கடந்த பெப்ரவரி மாதம் காலி எல்பிட்டிய பிரதேசத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தீபால் ரொஸான் குமார தன் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் துப்பாக்கியால் சுட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். ஆனால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
22.06.2024 அன்று, கொலைக்கு சந்தேகப்படும் நபர் கல்கிசை படோகிவிட்டப் பிரதேசத்தில் 2200 கிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கல்கிசை பிரதான பொலிஸ் நிலையத்தின் அதிகாரி திலிப்பஸ் பெரேராவின் தலைமையிலான குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டது. இந்த விசாரணைகளின் போது, அவர் அல்பிட்டிய சுகாதாரப் பரிசோதகர் கொலையை ஒப்பந்த அடிப்படையில் செய்தவர் என தெரியவந்தது.
மேலும், சந்தேக நபருக்கு தங்குமிட வசதிகளை வழங்கியதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 9 எம்.எம். அமெரிக்கா தயாரிப்பிலான பிஸ்டல்கள் இரண்டு, அதற்குரிய ரவைகள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய இத்தாலி உற்பத்தி மோட்டார் பைக்குகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்விடயத்தை மேல்மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எச்மாரப்பன் தலைமையில் இன்று 04.07.2024 கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்களை பரிசிலீத்தார். கல்கிசை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பிரசன்ன பிரத்மனகே, உதவிப் பொலிஸ் அதிகாரி ரொஹான் புஸ்பகுமார, மற்றும் கல்கிசை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொறுப்பதிகாரி திலிப்பஸ் பெரேரா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸ் பிரிவு மேற்கொண்டு வருகின்றனர்.