பி எஸ் எப் வீரரை கத்தியால் குத்தி கொலை.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 12, 2024, 9:53:02 AM

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஏரிவாய் பகுதியை சேர்ந்தவர் கனகசபாபதி (24). திருமணமாகவில்லை .எல்லை பாதுகாப்பு படை வீரராக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். 

மேற்கு வங்கம் டார்ஜிலிங் பகுதியில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது வலது கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காயமுற்ற கனகசபை சிகிச்சைக்காக தன்னுடைய சொந்த ஊரான ஏரிவாய் கிராமத்துக்கு விடுமுறையில் வந்துள்ளார்.

இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பரான ஆனந்தராஜ் உடன் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு மதுபான கடையில் மது வாங்கிக் கொண்டு அருகாமை பகுதியில் இருவரும் அமர்ந்து மது அருந்தி வந்ததாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் ஆனந்தராஜ்க்கும் அங்கு ஏற்கனவே மது அருந்த வந்த ஒரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதை மடக்க சென்ற கனகராஜ்யை அங்கிருந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் மகனின் வலது பக்க இடுப்புக்கு மேல், இடது பக்க தோள்பட்டையின் பின்பகுதியிலும், ஆனந்தராஜிக்கு இடது பக்க தோள்பட்டையிலும், இடது கையிலும் கத்தியால் வெட்டியுள்ளனர்.

படுகாயம் அடைந்த கனகராஜ் தன்னுடைய புல்லட் வாகனத்தில் ஆனந்தராஜை உட்கார வைத்து மதுபான கடையில் இருந்து சுமார் 1.5 கி.மீ தூரம் ஊத்துகாடு எல்லையம்மன் கோவிலை தாண்டி வரும்போது கனகராஜ் சாலையில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது ஆனந்தராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். ஆனந்த அஜித் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

எல்லை பாதுகாப்பு வீரரை கொலை செய்த வழக்கில் வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து , ஊத்துக்காடு பகுதியில் பதுங்கி இருந்த நாயக்கன் குழப்பத்தை சேர்ந்த ராஜேஷ் , அருண், ஊத்துக்காடு பகுதி சேர்ந்த வெங்கடேசன், பழனி ஆகிய நான்கு பேர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended