ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் புகுந்து சரமாரி தாக்குதல்.
அந்தோணி ராஜ்
UPDATED: Aug 23, 2024, 10:17:26 AM
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் பெரிய சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்த்தவர் குருமூர்த்தி (வயது 48). இவர் ராஜபாளையத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகிறார்.
குருமூர்த்தி தனது அலுவலகத்தை ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் காம்ப்ளக்சில் வைத்துள்ளார்.
ஓட்டுநர் பயிற்சி பள்ளி சங்க செயலாளராக இருந்து வந்த குருமூர்த்திக்கும் மற்ற ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களுக்கும் இடையே கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து இருதரப்புக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.
Latest Virudhunagar District News
இந்தநிலையில் நேற்று இரவு குருமூர்த்தி தனது அலுவலகத்தில் இருக்கும் பொழுது மற்றொரு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்த வேல்முருகன் உள்பட 6 பேர் அதிரடியாக அவரது அலுவலகத்திற்குள் புகுந்து குரு மூர்த்தியிடம் கட்டணம் நிர்ணயம் குறித்தது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கைகலப்பில் குருமூர்த்தி அலுவலகத்தில் வைத்து மற்றொரு பயிற்சி பள்ளி உரிமையாளர் வேல்முருகன் உட்பட ஆறு பேர் குருமூர்த்தியை சரமாரியாக கடையில் வைத்து தாக்கியுள்ளனர்.
Latest Crime News
இதில் குருமூர்த்தி பலத்த காயம் அடைந்தார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து கடைக்காரர் வந்த நிலையில் மற்றொரு பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் இடத்தை விட்டு கலந்து சென்றனர்
இந்த நிலையில் இச்சம்பம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பலத்த காயம் அடைந்த குருமூர்த்தியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராஜபா ளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News
குருமூர்த்தி மற்ற பயிற்சி பள்ளி உரிமையாளர்களால் சரமாரியாக தாக்கப்பட்டது அவர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
குருமூர்த்தி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகின்றன.