புதையல் தோண்டிய நால்வர் கைது
ராமு தனராஜா
UPDATED: Oct 18, 2024, 4:40:05 AM
நேற்று (17) திபுலபலஸ்ஸ பகுதியில் பேக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய கொண்டிருந்த 04 பேர், அதற்காக பயன்படுத்தப்பட்ட பேக்கோ இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவர் ரொட்டவெல திவுல்பலஸ்ஸ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மற்றைய சந்தேக நபர் கிராதுருகோட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
ALSO READ | வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் இருந்த மேலும் மூவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.எஸ்.பி.பலிபான ஆகியோரின் பணிப்புரையின் பேரில், மஹியங்கனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரபோப சந்தன உள்ளிட்ட குழுவினரால் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
ALSO READ | சென்னை கனமழையால் நீர் தேங்கி மக்கள் கடும் அவதி.
சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.