ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
ராமு தனராஜா
UPDATED: Aug 3, 2024, 3:26:39 AM
ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று மாலை (02) கைதுசெய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை ஹொப்டன் பழைய தொழிற்சாலை B.பிரிவை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த நபர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கொழும்பு ஆமர் வீதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு தொழிலுக்கு சென்றதாகவும் நேற்று காலை விடுமுறையில் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேக நபரிடம் இருந்து 10 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை பசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பதுளை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் த சில்வாவின் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் லுணுகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யின் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு