• முகப்பு
  • குற்றம்
  • சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போஸ்கோ சட்டத்தில் கைது.

சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போஸ்கோ சட்டத்தில் கைது.

மாரிமுத்து

UPDATED: Mar 20, 2023, 7:57:57 PM

 

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுலத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்த காரணத்தினால் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கனியரசு மனைவி ராதிகா தருவைகுளம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் எனது உறவினர் மகள் ஞாயிற்றுக்கிழனம அங்கு சென்ற  சிறுமி சோர்வாக இருந்தார் அப்போது நான் சிறுமியிடம் ஏன் சோர்வாக இருக்கிறாய் உடம்புக்கு சரி இல்லையா என்று கேட்டபோது இல்லை மிக்கேல் தாத்தா பத்து ரூபாய் கொடுத்து வீட்டுக்கு வா என்று அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்று புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் தருவைகுளம் காவல் நிலைய போலீசார் சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்ததின் அடிப்படையில் புகாருக்கு ஆளான மிக்கேல் மீது போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எட்டு வயது சிறுமிக்கு 70 வயது முதியவர் பாலியல் தொந்தரவு செய்து தருவைகுளம் காவல் நிலையத்தில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு உள்ளது அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டவுடன் முதன் முதலில் செய்தி வெளியிட்டது தி கிரேட் இந்தியா நியூஸ்.  சிறுமிக்கு உடனடி சிகிச்சையும்  மற்றும்  காமக்கொடூரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த நமது செய்தியாளருக்கு சிறுமியின் உறவினர்கள் கண்ணீர் கலந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

VIDEOS

Recommended