720 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

ராமு தனராஜா

UPDATED: Jun 4, 2024, 10:58:17 AM

பசறை தெஹிகிடகம பகுதியில் இன்று (04) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 720 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

 பசறை பொலிஸார் மற்றும் ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிகிடகம பசறை பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


விசேட அதிரடிப் படை மற்றும் பசறை பொலிஸ் யாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அமைய குறித்த சுற்றி வளைப்பை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 720 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப பியரத்ன ஏக்கநாயக்க மற்றும் ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர் 

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பசறை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended