உதகையில் வாடிக்கையாளருக்கு கெட்டுப்போன பிரியாணியை கொடுத்த உணவகம்.
அச்சுதன்
UPDATED: May 9, 2024, 6:46:09 AM
உதகை செய்திகள்
உதகை G1 காவல் நிலையம் எதிரே பால்ஸ் ரெஸ்டாரண்ட் என்கிற உணவகம் செயல்பட்டு வருகிறது.
இன்று சுமார் 12 மணி அளவில் உதகையை சேர்ந்த லியோ என்கின்ற பெண்மணி தங்களது குழந்தைகளுக்கு இரண்டு பிரியாணி பார்சல் வாங்கியுள்ளார்.
வீட்டிற்கு சென்று தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க பிரியாணி பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அப்போது இரண்டு பிரியாணியும் கெட்டுப் போய் உள்ளது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து உணவக உரிமையாளரிடம் சென்று கேட்டபோது ஒரு பிரியாணி பார்சலை வாங்கி உடனடியாக குப்பை தொட்டியில் கொட்டி விட்டு பிரியாணி இங்கு வாங்கவில்லை என அலட்சியமான பதிலை கூறியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி செய்தியாளர்களிடம் கூறும்போது தான் இந்த உணவகத்தில் தான் இரண்டு பிரியாணி பார்சல் வாங்கியதாகவும் அதற்கான பணத்தை ஜிபே மூலம் எனது நண்பர் செலுத்தியதாகவும்,
ஆனால் இந்த பிரியாணி பார்சல் இந்த கடையில் வாங்கவில்லை என கூறுவது எப்படி என்றும், இந்த பிரியாணியை எனது பிள்ளைகள் உட்கொண்டு இருந்தால் எனது பிள்ளைகளுக்கு ஏதாவது உடல் உபாதைகள் ஆகி இருந்தால் கடை உரிமையாளர் பொறுப்பேற்பாரா என பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
ALSO READ | திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
தற்போது கோடை சீசன் நிலவி வரும் நிலையில் உதகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் உதகையில் உள்ள உணவகங்களில் சுகாதாரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் கோரிக்கை எழுந்துள்ளது.