• முகப்பு
  • குற்றம்
  • 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்யும் போது நபர் ஒருவர் கைது

120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்யும் போது நபர் ஒருவர் கைது

ராமு தனராஜா

UPDATED: Jun 4, 2024, 8:17:41 AM

மஹியங்கனை, தம்பர பகுதியில் நேற்று (03) 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்யும் போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கைதுசெய்யப்பட்ட 

சந்தேக நபரிடம் இருந்து 230 போதை மாத்திரைகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 மஹியங்கனை தம்பராவ பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 சந்தேகநபர் கொழும்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து போதைப்பொருள்,போதை மாத்திரைகள், , கேரளா கஞ்சா போன்றவற்றை கொண்டு வந்து அப்பகுதி இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தன, பதுளை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மஹியங்கனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.எஸ்.பலிபான மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோபா டபிள்யூ.எம். விஜேரத்ன, தி 20 போசா 660 போதைப்பொருள் தடுப்பு ப பிரிவின் அதிகாரி போசா 67664 சந்திரசேன போக்கோ 81655 தாரக, போகோ 81362 பிரேமரத்ன, கபோகோ 9121 மலிகா மற்றும் கபோகோ 9166 நிசன்சல ஆகியோர் சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர் 

விசாரணையின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றின் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

VIDEOS

Recommended