கல்வராயன்மலை பகுதியில் 1400 லிட்டர் கள்ளச்சாராயம் காவல்துறையினரால் அழிப்பு.
கோபி பிரசாந்த்
UPDATED: May 1, 2024, 10:26:33 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 1,400 லிட்டர் சாராய ஊறலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அழித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங்மீனா உத்தரவின்பேரில், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கவியம் அருவி அருகே, தாழ்தொரடிப்பட்டு மேற்கு காட்டுகொட்டாய் ஆகிய பகுதியில் பேரல்களில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் சாராய ஊறல் இருந்தது தெரிந்தது.
தொடர்ந்து, 200 லிட்டர் வீதம் 7 பேரல்களில் இருந்த 1,400 லிட்டர் சாராய ஊறலை அதே இடத்தில் கொட்டி அழித்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு