கடந்த வாரம் கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து பொறியாளர் உயிர் இழந்த சம்பவத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் நேரில் ஆய்வு.
ஆனந்த்
UPDATED: Aug 24, 2024, 6:21:15 PM
சென்னை
அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வாரம் தனியார் நிறுவனத்தின் ஊழியர் தினேஷ் குமார் தவறி விழுந்து உயிர் இழந்தார்.
பொறியாளரான தினேஷ் குமார் உயிர் இழந்தது குறித்து சம்பவ இடத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் ஆய்வு செய்தது.ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் சம்மந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஆய்வு செய்தார்.
தேசிய தூய்மை பணியாளர் ஆணையம்
அவருடன் வருவாய், ஊராட்சி ,காவல்துறையினர் உடன் இருந்தனர். அவர்களிடம் உயிர் இழப்பு குறித்து விளக்கம் கேட்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்
தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசும் போது, "கடந்த ஒரு வருடத்தில் திருவள்ளுவர் மாவட்டத்தில் மட்டும் நான்கு மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த வருடம் மீஞ்சூர் பகுதியில் இரண்டு பேரும் ஆவடி பகுதியில் ஒருவரும் கடந்த வாரம் மீண்டும் ஆவடி பகுதியில் ஒருவரும் மலக்குழியாள் மரணம் அடைந்துள்ளனர்.
Latest Breaking News
இந்தியாவிலேயே மலக்குழி மரணங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2024 வரை கணக்கெடுத்தால் இதுவரை 258 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றங்களில் தமிழகம் முதலிடம் வகித்தாலும் மலக்குழி மரணங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. இதனைக் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழக ஏன் மலக்குழி மரணங்களில் முதலிடம் வகிக்கிறது என்றால் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். தூய்மை பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு இல்லை அரசுக்கும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டங்கள் இல்லை.
Latest Chennai News
கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி வானகத்தில் உள்ள ஸ்கை அப்பார்ட்மெண்டில் ஒருவர் கழிவுநீர் அகற்றும் பணியின் போது மரணம் அடைந்தார். அது தொடர்பாக ஆய்வு செய்ய வந்துள்ளோம்.
அவர் கழிவினை தொட்டிக்கான பைப்பை மட்டும் இயக்கும் போது வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். உடற்குறை முடிவுகள் வெளிவந்த பிறகு தான் இது மலக்குழி மரணமா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.
இதையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால் தேசிய பசுமை தீர்ப்பாயம் போல மாநில பசுமை தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். அப்போதுதான் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
News
அதுமட்டுமின்றி அப்போதுதான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நேரில் ஆய்வு செய்வார்கள். குறிப்பாக தூய்மை பணியாளர்களுக்கு என 500 ரூபாய்க்கும் மேல் ஊதியம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதில் 200 ரூபாய் எங்கு செல்கின்றது என்று தெரியவில்லை.
இதற்கென தனியாக சிறப்பு சட்டத்தை இயற்றி மாநில அரசு இதற்காக தனி ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.