• முகப்பு
  • உலகம்
  • சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் ஏன் தாமதம் ?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் ஏன் தாமதம் ?

Bala

UPDATED: Jun 28, 2024, 5:22:40 AM

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதாவில்லியம்ஸ் அமெரிக்க கடற் படை அகாடமியில் படித்து 1998-ம் ஆண்டு நாசா விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 

இதையடுத்து 2006 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் சுனிதா விண்வெளி பயணம் மேற்கொண்டார், அதிக நேரம், 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் செலவிட்ட இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றார்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், கடந்த 5-ந்தேதி மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டனர். கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற அவர்கள், 7-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். மூன்றாவது முறையாக விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார் சுனிதா.

அவர்கள் 13-ந்தேதி பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த பயணம், திடீரென 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தேதியிலும் அவர்கள் புறப்படவில்லை. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையால், அவர்கள் திரும்ப முடியவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், 'ஸ்டார் லைனர்' என்ற ஸ்பேஸ் ஷிப்பை தயாரித்துள்ளது. இது சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதற்குள் நாசா தான் மேற்கொண்டு வந்த பணிகளை, தனியாரை ஊக்குவிக்கும் விதமாக போயிங் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

போயிங் நிறுவனம் ஏற்கனவே எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் ஷிப்புகளை வடிவமைத்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இந்த 'ஸ்டார் லைனர்' ஸ்பேஸ் ஷிப்பில் விண்வெளிக்கு பயணித்தனர். 

விண்வெளியில் சென்றபோது விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டது. 5 முறை கசிவு ஏற்பட்டதால், விண்கலத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டது. விண்கலத்தில் உள்ள 28 த்ரஸ்டர்களில் 14 த்ரஸ்டர்கள் பழுதடைந்துள்ளன.

'ஸ்டார் லைனர்' விண்கலத்தில் 45 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும், அதே நேரத்தில், பல்வேறு பாதுகாப்பு முறைகளால் 75 நாட்கள் வரை வசதி இருக்கிறது. 

நாசா, இந்த சிக்கலை சரிசெய்து, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு விண்கலத்தை திருப்பி அனுப்ப நம்பிக்கையுடன் உள்ளது. 'ஸ்டார் லைனர்' மூலம் திரும்ப முடியாவிட்டால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை காப்பாற்ற எலான் மஸ்க்கின் உதவியை நாடலாம் என தெரிகிறது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் திரும்பும் திட்டம் ஜூலை 2-ந்தேதிக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

VIDEOS

Recommended