• முகப்பு
  • உலகம்
  • அமெரிக்க முன்னால் ஜனாதிபதி டிரம்பை மீண்டும் கொல்ல முயற்சி.

அமெரிக்க முன்னால் ஜனாதிபதி டிரம்பை மீண்டும் கொல்ல முயற்சி.

கார்மேகம்

UPDATED: Sep 17, 2024, 10:07:51 AM

வாஷிங்டன்

அமெரிக்க முன்னால் ஜனாதிபதி டிரம்பை மீண்டும் கொல்ல முயற்சி நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

( அமெரிக்க தேர்தல்)

அமெரிக்காவில் கடந்த 2017- ம் ஆண்டு முதல் 2021- ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் டொனால்டு டிரம்ப்( வயது 78) அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார் 

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் களம் இறங்கியுள்ளார் இதனால் அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து உள்ளது.

இரு வேட்பாளர்களுக்கு இடையேயான நேரடி விவாதமும் சமிபத்தில் நடந்தது  தேர்தல் களத்தில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள டிரம்புக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

( டிரம்ப் )

கடந்த ஜுலை மாதம் பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது இதில் வலது காதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்ததுடன் 2- பேர் படுகாயமும் அடைந்தனர் இந்த பயங்கர தாக்குதலை அரங்கேற்றிய தாமஸ் மேத்யூ என்பவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்

இந்த படு கொலை முயற்சி சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அத்துடன் டிரம்புக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்துள்ளது

( கோல்ஃப் விளையாடிக் கொண்டு

இருந்தார்)

அந்த வகையில் புளோரிடாவின் வெஸ்ட்  பாம் கடற்கரை பகுதியில் உள்ள தனது  கோல்ஃப் மைதானத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி பகல் 1.30 மணியளவில் டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டு இருந்தார் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிலும் கண்காணித்துக் கொண்டு இருந்தனர்

அப்போது டிரம்ப் நின்றிருந்த இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் மர்ம நபர் ஒருவர் ஏ.கே.47- துப்பாக்கியால் டிரம்பை நோக்கி வேலி வழியாக குறிபார்த்துக் கொண்டு இருந்தார் இதை டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர்

உடனடியாக அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர் அத்துடன் அவரை பிடிப்பதற்காக பாய்ந்தனர் 

( மர்ம நபர் ஓட்டம் )

உடனே அந்த மர்ம நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி திருப்பி சுட்டாரா ?என தெரியவில்லை 

அதேநேரம் டிரம்பை பாதுகாப்பதற்காக அதிகாரிகள் அவரை சூழ்ந்து கொண்டு அரண்போல நின்றனர், பின்னர் கோல்ஃப் வண்டியில் அவரை ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்

துப்பாக்கியுடன் இருந்த மர்ம நபரை தக்க நேரத்தில் அதிகாரிகள் கண்டுபிடித்ததால் டிரம்ப் எந்தவித காயமுமின்றி தப்பினார் 

டிரம்பை கொல்ல முயற்சி நடந்தது குறித்தும் அவரது கண் எதிரே துப்பாக்கி சூடு நடந்தது பற்றியும் நாடு முழுவதும் தகவல் பரவியது இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது 

( கட்டுமான நிறுவன அதிபர்)

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்த முயன்றவரை பின்னர் அதிகாரிகள் கைது செய்தனர் 

அவரது பெயர் ரியான் வெஸ்லிரூத் (58) என்பதும் அவர் ஹவாயில் சிறிய கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததும் பின்னர் தெரியவந்தது டிரம்பை கொலை செய்ய முயற்சித்தது ஏன் ? எனவும் அவருக்கு பின்னால் வேறு நபர்கள் யாராவது உண்டா? எனவும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தனது ஆதரவாளர்களுக்கு டிரம்ப் வெளியிட்ட செய்தியில் எனது கண் முன்னால் துப்பாக்கி சூடு நடந்தது ஆனால் இது தொடர்பாக வதந்தி பரபுவதற்கு முன்னால் முதலில் நானே உங்களுக்கு கூறுகிறேன் நான் பாது காப்பாகவும் நலமாகவும் இருக்கிறேன் எதுவும் என்னை கட்டுப்படுத்தாது நான் ஒருபோதும் சரணடையமாட்டேன் என குறிப்பிட்டு இருந்தார்

மேலும் தனக்கு எதிரான இந்த 2- வது கொலை முயற்சி சம்பவத்திலும் தன்னை பாதுகாத்த அதிகாரிகளுக்கு அவர் நன்றியும் தெரிவித்து உள்ளார்

அது குறித்து அவர் நடந்த பணி முற்றிலும்  சிறப்பானது நான் ஒரு அமெரிக்கன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் கூறியிருந்தார்

( ஜோபைடன் கண்டனம்)

கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் மீது மீண்டும் கொலை முயற்சி நடந்திருப்பது  குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது

இதில் டிரம்ப் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டது குறித்து இருவரும் மகிழ்ச்சியும் திருப்தியும் வெளியிட்டனர் அதே நேரம் இந்த கொலை முயற்சி சம்பவத்துக்கு ஜோபைடன் கடுமையாக கண்டனமும் தெரிவித்தார்

மேலும் கொலை முயற்சி சம்பவம் மற்றும் கைது செய்யப்பட்டவரிடம் நடந்து வரும் விசாரணை குறித்த தகவல்களை அவ்வப்போது கேட்டறிந்தும் வருகிறார் டிரம்பை துப்பாக்கியால் சுட முயன்று கைது செய்யப்பட்டு உள்ள ரியான் வெஸ்லிரூத் மீது வடக்கு கரோலினாவில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது 

World News in Tamil -

டிரம்பை அடிக்கடி விமர்சித்து வந்துள்ள அவர் கடந்த காலங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு அதிக நன்கொடையும் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் அதில் போட்டியிடும் டிரம்பை மீண்டும் கொல்ல முயன்றுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

VIDEOS

Recommended