• முகப்பு
  • உலகம்
  • அயர்லாந்து நோக்கி பயணித்த கட்டார் விமானம் தாரை இரக்கம் 12 பயணிகள் சிறு காயம்

அயர்லாந்து நோக்கி பயணித்த கட்டார் விமானம் தாரை இரக்கம் 12 பயணிகள் சிறு காயம்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 27, 2024, 11:25:43 AM

International News

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டதில் 12 பேர் காயமடைந்தனர்.

கத்தாரின் தோஹாவில் இருந்து அயர்லாந்தின் டப்ளினுக்கு சென்ற கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் துருக்கிக்கு மேலால் ஏற்பட்ட மேக கொந்தளிப்பு காரணமாக விமானத்தில் இருந்தவர்களில் 12 பேர் காயமடைந்தனர். 

 உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் டப்ளினில் மிகவும் பாதுகாப்பாக தரையிறங்கியது.

Today International News

டப்ளின் விமான நிலையத்தின் அறிக்கையின்படி, சம்பவத்தில் ஆறு பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் காயமடைந்தனர், அவர்களில் எட்டு பேர் வைத்தியர்களின் ஆலோசனையின் படி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  

கத்தார் ஏர்வேஸ் விமானம் QR107 துருக்கிக்கு மேல் பறக்கும் போது கொந்தளிப்பை சந்திக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

VIDEOS

Recommended