அமெரிக்காவில் களை கட்டிய தீபாவளி கொண்டாட்டம் ஜோபைடன் கமலா ஹாரிஸ் வாழ்த்து.
கார்மேகம்
UPDATED: Nov 2, 2024, 11:16:20 AM
வாஷிங்டன்
இந்துக்களின் பண்டிகையான தீபாவளி நேற்று முன்தினம் நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது இந்தியா மட்டும் இன்றி உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம் .
அந்த வகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டின பண்டிகையையொட்டி அமெரிக்கா முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் பல முக்கிய இடங்கள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன
தீபாவளியையொட்டி ஜோபைடன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் இந்த தீபாவளியில் ஒளியின் திரளான சக்தியைக் காட்டுவோம் அறிவின் ஒளி ஒற்றுமை உண்மை சுதந்திரம் ஜனநாயகம் எதுவும் சாத்தியமாக இருக்கும் அமெரிக்காவுக்கான வெளிச்சம் என குறிப்பிட்டிருந்தார்.
தீபாவளி
முன்னதாக இந்தவார தொடக்கத்தில் ஜனாதிபதி ஜோபைடன் 600/ க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அவர்களுடன் தீபாவளியை கொண்டாடியது குறிப்பிடதக்கது
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆண்டுதோறும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்
ஜனாதிபதி தேர்தல்
ஆனால் தற்போது அவர் தேர்தலையொட்டி சூறாவளி பிரச்சாரம் செய்து வருவதால் இந்த முறை அதை செய்யவில்லை அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அமெரிக்கா மற்றும் உலகெங்கும் உள்ள 100 கோடிக்கும் அதிகமான மக்களுடன் நாங்களும் இணைந்து தீபங்களை ஏற்றி தீமைக்கு எதிராக நன்மைக்கான போராட்டத்தையும் அறியாமைக்கு எதிரான அறிவு மற்றும் இருளுக்கு எதிரான ஒளியையும் கொண்டாடுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.