அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து போப் கருத்து 2 வேட்பாளர்களும் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு எதிரானவர்கள் இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
கார்மேகம்
UPDATED: Sep 15, 2024, 8:34:24 AM
ரோம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த போப் பிரான்சிஸ் 2 வேட்பாளர்களும் வாழ்கை நெறிமுறைக்கு எதிரானவர்கள் என்றும் இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.
( விமானத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு)
ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனது 12- நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் விமானம் மூலம் ரோம் திரும்பினார் விமான பயணத்தின் போது அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்
போப் பிரான்சிஸ் 2
அப்போது அவரிடம் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என போப் விரும்புகிறார் ?
என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்
அப்போது அவர் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் கமலா ஹாரிசின் பெயரை குறிப்பிடாமல் அவர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்
இது பற்றி அவர் கூறியதாவது
இருவருமே ( ஜனாதிபதி வேட்பாளர்கள்) வாழ்க்கை நெறிமுறைக்கு எதிரானவர்கள் ஒருவர் அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியோற்றுகிறார் மற்றொருவர் தாயின் கருவில் உள்ள குழந்தையை கொல்கிறார்
அமெரிக்க தேர்தல்
( குறைவான தீமை உடையவர் யார் )
அகதிகளை வெளியேற்றுவது மற்றும் விருப்பத்துக்கு மாறாக அவர்களை அடைத்து வைப்பது மிகவும் பயங்கரமானது
அதே போல் தாயின் வயிற்றில் உள்ள கருவை அழிப்பது ஒரு படுகொலை ஏனெனில் அங்கு உயிர் உள்ளது நான் ஒரு அமெரிக்கர் இல்லை நான் அங்கு வாக்களிக்கப் போவதும் இல்லை ஆனால் ஒன்று தெளிவாக இருக்கட்டும்
அமெரிக்கர்கள் இப்போது இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் யார் மிகவும் குறைவான தீமை உடையவர் ?
அந்த பெண்மணியா அல்லது அந்த ஜென்டில்மேனா? அது எனக்கு தெரியாது ஒவ்வொருவரும் தங்களின் மனச்சாட்சிப்படி சிந்தித்து முடிவெடுக்கட்டும் அதே சமயம் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது என்பது அசிங்கம் அது நல்லதல்ல அனைவரும் வாக்களிப்பது அவசியம் இவ்வாறு போப் பிரான்சிஸ் கூறினார்
( டிரம்ப் - கமலா ஹாரிஸ்)
அமெரிக்க ஜனாதிபதி குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கியுள்ள முன்னால் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுக்குள்ள சட்ட விரோதமாக நுழைந்த அகதிகளை ஒட்டு மொத்தமாக நாடு கடத்துவேன் என கூறிவருகிறார்
அதே போல் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தான் ஜனாதிபதியானால் கருக்கலைப்பை பெண்களுக்கான தேசிய உரிமையாக்கிய 1973- ம் ஆண்டு சட்டத்தினை திரும்பவும் மீட்டெடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.