ஈரான் அதிபர் மரணத்தில் மர்மம் என்ன ?

Bala

UPDATED: May 20, 2024, 8:25:02 AM

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இரானிய அதிபர் இப்ராஹிம் ராய்ஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. 

அந்த பிராந்தியத்தை கடுமையான பனி மூட்டம் சூழ்ந்திருக்கிறது..... ஹெலிகாப்டர் அவசர கால தரையிறக்கம் செய்திருக்கிறது ஆள் நடமாட்டம் இல்லாத மலை பகுதி அது விபத்து நடந்து இருபது நிமிடங்களுக்குள்ளாக அந்த இடத்தை முற்றிலும் இருள் சூழ்ந்து விட்டது... என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்தாலும்.

நடந்திருப்பது சாதாரணமானதாக தெரியவில்லை ஏன்?????

இன்று உள்ள உலக அரசியல் அத்தகையது.

மூன்று ஹெலிகாப்டரில் அஜர்பைஜானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சென்று இருக்கிறார்கள்.

ஈரானிய அதிபரோடு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொஸைன் அமீர் அப்துல்லா ஆஹியன் உட்பட மிக முக்கியமான மூன்று பேர் மொத்தமாக பயணம் செய்து இருக்கிறார்கள்.

இன்றைய தேதியில் அதி உச்ச உயிராபத்து உள்ளவர்களின் பட்டியலில் இவர்கள் அனைவருமே வருகிறார்கள். அப்படி இருக்க....... இவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டருக்கு விபத்து என்றால் அந்த இடத்தில் கேள்வி எழுகிறது ???

கூடவே பயணம் செய்த ஹெலிகாப்டர்களுக்கு உடன் பயணித்த ஹெலிகாப்டர் பற்றின தகவல் தொடர்பு இல்லை அது எந்த இடம் தெரியவில்லை என்கிறார்கள்.

ரேடார் திரைகளில் மறைந்த இடம் பற்றின குறிப்புகள் இல்லை என்கிறார்கள். விபத்து நடந்த இடத்திலிருந்து செல்போன் சிக்னல் ஒன்று பெறப்பட்டது என்கிறார்கள், அடுத்த அரைமணி நேரத்தில் மறுத்திருக்கிறார்கள்‌.

இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் தேடிக் கொண்டு இருப்பதாக சொல்லும் அவர்களே விபத்தில் ஹெலிகாப்டர் வெடித்திருந்தால் எப்படியான அசாதாரண சூழல் இருக்குமோ அது போல இருக்கிறது என்கிறார்கள். 

ஹெலிகாப்டருக்கு சேதம் இல்லை என்றால் தகவல் பரிமாற்றம் ஏதோ ஒரு விதத்தில் இருக்கும் ஊகிக்கக்கூடிய இடத்தில் இவர்கள் சொல்லும் காரணங்கள் பொருந்தி போகவில்லை.

இன்றுள்ள புவிசார் அரசியலில் இஸ்ரேல் ஈரான் பிரச்சினை உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. இதில் இஸ்ரேலிய மொசாட் பற்றி தெரிந்தவர்களுக்கு இது எந்த மாதிரியான பாணி என்பது சொல்லாமலேயே புரிந்துக் கொள்ளும் விஷயமாக இருக்கிறது.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹூ ஹொதிகளுக்கு எதிராக வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியாமல் அங்கு திண்டாடி வருகிறார். போதாக்குறைக்கு அவருக்கு போராட்டக்காரர்கள் எட்டாம் தேதி வரை கெடு விதித்திருப்பதெல்லாம் ஊர் அறிந்த ரகசியம்.

கடந்த வாரம் தான் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது, சபஹார் துறைமுக குத்தகை விஷயத்தில் என்பதையும் நாம் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அணு ஆயுத நாடாக மாற ஓர் கண் அசைவு போதும் என்றெல்லாம் தற்போது தான் ஈரான் பேச ஆரம்பித்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் கஸிம் சொலைமனியை அவரது காரில் வைத்தே அமெரிக்க சிஐஏ தூக்கி இருக்கிறது. தற்போது இதனை செய்ய பெரிய சாமர்த்தியம் எல்லாம் வேண்டியிருக்காது அவர்களுக்கு என்கிற நிலையில்.......?????

நம் இந்தியாவில் நம்முடைய முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இதே போன்றதோர் பனி மூட்டம் சூழ்ந்திருந்த பிராந்தியத்தில் இறந்தார்.

அதுபோலவே இந்த சம்பவத்தின் சாயல் தெரிவதெல்லாம் எதேச்சையானதல்ல....

ஈரானில் ராணுவம் அதி உச்ச உஷார் நிலைக்கு சென்று இருக்கிறது. நகரின் முக்கிய சந்திப்புகளில் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

 

VIDEOS

Recommended