• முகப்பு
  • உலகம்
  • குவைத் ஹஜ்ஜு பெருநாள் தினத்தை விடுமுறையாக அறிவித்துள்ளது

குவைத் ஹஜ்ஜு பெருநாள் தினத்தை விடுமுறையாக அறிவித்துள்ளது

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 11, 2024, 5:53:41 PM

குவைத் 2024 ஈத் அல் அழ் ஹாவின் முதல் நாளை விடுமுறையாக அறிவித்துள்ளது.

 ஈத் அல்-அல்ஹாவைக் குறிக்கும் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வ விடுமுறையாக ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூன் 18 செவ்வாய் கிழமைக்கு இடையில் அனைத்து அமைச்சகங்கள், அரசு அமைப்புகள் மற்றும் பொது நிறுவனங்களின் பணிகளை நிறுத்த குவைத் அமைச்சரவை இன்று செவ்வாயன்று முடிவு செய்தது.

 அமைச்சரவையின் வாராந்த கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொது ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் ஜூன் 19 புதன்கிழமை மீண்டும் பணிக்கு திரும்புவார்கள்.

நாட்டில் வெள்ளி மற்றும் சனி வார இறுதி நாட்கள் என்பதால், ஜூன் 14 வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 18 செவ்வாய் வரை ஐந்து நாள் விடுமுறையை மக்கள் அனுபவிப்பார்கள்.

 பொதுவாக தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த காலம் இஸ்லாமிய நாட்காட்டியில் புனிதமான ஒன்றாகும்.  

சிறப்பு பிரார்த்தனைகள், விருந்துகள் மற்றும் விசேட தான தருமங்கள் இந்த தினத்தில் கடைபிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended