• முகப்பு
  • உலகம்
  • நஸ்ரல்லாஹ்வின் படுகொலையினை தொடர்ந்து ஈரானில் ஐந்து நாட்கள் துக்க தினமாகும்

நஸ்ரல்லாஹ்வின் படுகொலையினை தொடர்ந்து ஈரானில் ஐந்து நாட்கள் துக்க தினமாகும்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Sep 30, 2024, 1:11:33 AM

லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் நசரெல்லாவின் மறைவையடுத்து ஈரானின் உச்ச தலைவர் அல் கமேனி ஐந்து நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் ஜனாதிபதியினை விட அதிகாரம் படைத்தவர் நாட்டின் உச்ச தலைவர். காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் தாக்கி லெபனானில் ஹிஸ்புல்லாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் போது தன்னால் இனியும் நிற்க முடியாது என்று கமேனி பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், நசரெல்லாவின் கொலைக்காக கமேனியோ அல்லது ஈரானோ அமைதியாக காத்திருக்க மாட்டார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நஸ்ரல்லாஹ்வின் படுகொலையானது மத்திய கிழக்கு பிராந்தியத்தை சூடாக்கும் தீப்பிழம்புகள் காட்டுத்தீயாக பரவுவதற்கு காரணமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

 

VIDEOS

Recommended