• முகப்பு
  • உலகம்
  • கமலா ஹாரிஸ்கும் டிரம்புக்கும் இடையிலான காரசாரமான விவாதம்.

கமலா ஹாரிஸ்கும் டிரம்புக்கும் இடையிலான காரசாரமான விவாதம்.

கார்மேகம்

UPDATED: Sep 30, 2024, 11:44:22 AM

வாஷிங்டன்

( கமலா ஹாரிசின் காதணி சர்ச்சை)

ஒரு ரகசிய சாதனம் அல்லது ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்துவது போன்ற கருவியின் உதவியால் தான் வெளியில் இருந்து யாரோ உடனுக்குடன் அளித்த தகவல்கள் மூலம் கமலா ஹாரிஸ் விவாதத்தில் ஜொலித்தார் என்று சூடு கிளப்பினர் 

போதாக்குறைக்கு ஒரு ஜெர்மானிய கணினித் தொழில்நுட்ப நிறுவனம் கமலாவின் காதணி தங்களின் புளூடூத் சாதனம் போலவே இருப்பதாக சர்ச்சையில் எண்ணெய் வார்த்தது சமூக வலைத்தளங்களில் இந்த சலசலப்பு ஓடிக் கொண்டிருந்த நிலையில் கமலாவின் காதணி குறித்த உண்மைத் தகவல் வெளிவந்தது

கமலா ஹாரிஸ்

அதாவது அந்தக் காதணிகள் முத்து தோடுகள் என்று தெரியவந்தது அவற்றின் விலை 800 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.67 ஆயிரம் என்ற தகவலும் வெளியானது அதையடுத்து ஒரு பெண் அரசியல்வாதி அணிந்த காதணிக்கு இவ்வளவு அக்கப்போரா என்று பலரும் பொதுவெளியில் கருத்து கூறிவருகின்றனர் 

கமலாவை எதிர்த்து நிற்பவர் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பணக்கார ஜனாதிபதி வேட்பாளர் ஆண் அரசியல்வாதிகள் பலரும் கூட மிக விலை  உயர்ந்த கைக்கடிகாரம் போன்றவற்றை அணிகிறார்கள் அதை எல்லாம் விட்டுவிட்டு ஒரு பெண் வேட்பாளரின் காதணியை குறிவைக்கிறீர்களே என்று ஒருவர் விளாசியுள்ளார்

டிரம்பு

வெற்றிகரமான ஒரு பெண்மணி அதுவும் தனது வாழ்விலேயே ஒரு முக்கியமான நிகழ்வில் பங்கேற்கும் போது 800 டாலர் காதணிகளை அணிவதில் என்ன தவறு என இன்னொருவர் கேள்வி  எழுப்பியுள்ளார் மற்றொருவர் ஆண்கள்  அணியும் கழுத்து டை ரொம்ப ஆடம்பரமானது இல்லைதான் ஆனால்  ஆண் ஜனாதிபதிகள் அணிந்திருக்கும் கைக்கடிகாரங்களை பாருங்கள் அவை 5 ஆயிரம் டாலர்களில் இருந்து 60 ஆயிரம் டாலர்கள் வரை இருக்கும் அப்படிப் பார்க்கும் போது 800 டாலர் காதணிகள் சாதாரணமானவை தானே என்று கூறியுள்ளார் 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

டிரம்ப் ஆதரவாளர் போன்று தோன்றும் இன்னொருவர் 60 வயதை நெருங்கும் ஒரு  பெண்மணி நேரடி விவாதம் மாதிரியான முக்கியமான நிகழ்வின் போது விலை உயர்ந்த காதணி அணிவது அவசியமா என்று கேள்விக் கணையை வீசுகிறார்

ஆம் நம் நாடு என்றில்லை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களின் ஆடை அணிகலன்களை குறிவைத்து வம்பு வளர்க்கவே செய்கிறார்கள் என்பது  வருத்தத்துக்குரிய வேடிக்கை. 

 

VIDEOS