• முகப்பு
  • உலகம்
  • இஸ்ரேலின் ஹோலோன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலின் ஹோலோன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 4, 2024, 10:01:06 AM

இஸ்ரேலின் ஹோலோன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்ட இடத்தில் போலீஸ் அதிகாரிகள் "விரிவான தேடுதல்களை" ஆரம்பித்துள்ளனர்.

 டெல் அவிவ் அருகே இஸ்ரேலின் ஹோலோன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 கொல்லப்பட்ட இருவரும் 66 வயது பெண் மற்றும் “சுமார் 80 வயது முதியவர்” என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

 தாக்குதல் நடத்தியவர் மேற்குக் கரையில் வசிப்பவர் என்றும் சம்பவ இடத்தில் "நடுநிலைப்படுத்தப்பட்டதாகவும்" போலீசார் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

 ஒரு பெரிய போலீஸ் பிரசன்னம் சம்பவ இடத்தில் "ஹெலிகாப்டர் மற்றும் பிற வழிகளில் விரிவான தேடுதல்களை நடத்தப்பட்டுவருகின்றது.

 இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலியர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேலின் அரச பாதுகாப்பு மந்திரி இடாமர் பென்-க்விர், தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்டு, இஸ்ரேலியர்கள் தங்களை ஆயுதபாணியாக்குமாறு மீண்டும் அழைப்பு விடுத்தார்.

 “குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன், காயமடைந்தவர்கள் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் எங்கள் போர் ஈரானுக்கு எதிரானது மட்டுமல்ல, இங்கே தெருக்களில். இதனாலேயே நாம் இஸ்ரேல் மக்களுக்கு ஆயுதம் கொடுத்தோம்.

 கடந்த எட்டு மாதங்களில் ஆயுதங்களுக்கான 150,000 க்கும் மேற்பட்ட உரிமங்கள்" என்று அவர் கூறினார், "ஆயுதத்தை எடுத்துச் செல்லுங்கள், அது உயிரைக் காப்பாற்றுகிறது" என்று மக்களை வலியுறுத்தினார்.

 

VIDEOS

Recommended