மகளிர் பிரிவு கண்டியில் மாபெறும் பாதயாத்திரை

ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: May 23, 2024, 5:15:34 PM

சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 107 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை சாரணர் இயக்கத்தின் மகளிர் பிரிவு கண்டியில் மாபெறும் பாதயாத்திரை ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது.

'இன்றைய வலுவூட்டும் சிறுமி, நாளை வலுவூட்டும் மங்கையாவாள்' என்ற தலைப்பில் இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கண்டி பெண்கள் உயர் கல்லூரி மன் ஆரம்பித்த இவ் ஊர்வலம் கண்டி மஹாமாயா மகளிர் கல்லூரி வரை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் நாடாலாவிய ரீதியில் 1300 பெண் சாரணர்கள் கலந்து கொண்டனர். இவ்வூர்வலம் முடிவில் மஹாமாயா மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நினைவுப் பேருரை ஒன்றும் இடம் பெற்றது. இதற்கு பேராதனைப் பல்கலைக்கழக பௌதீக வியற் பிரிவு பேராசிரியை கலாநிதி சுரங்கிகா வடுகொட தலைமை தாங்கினார். 

இவ்வைபவத்தில் மகாமாயா கல்லூரி அதிபர் திருமதி சசிகலா சேனாதீர, அகில இலங்கை சாரணர் பயிட்சி போதானாசிரியை மதுரலதா ரம்புக்பொத்த, கண்டி மாவட்ட சாரணர் ஆணையாளர் ஜே.ஜி. சந்திராவதி, கண்டி தேசிய வைத்திய சாலை டாக்கடர் நந்தமித்ர ஓபந்தென்ன உற்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

Recommended