பாராளுமன்றத்தில் வெற்றிடமாகியுள்ள சபாநாகர் பதவிக்கு எதிர்கட்சி ஒருவரின் பெயரை முன்வைப்போம் - நளின் பண்டார எம்.பி
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Dec 15, 2024, 6:59:20 AM
10 வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டிருந்த அசேக ரண்வலவின் தமது பதவியினை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்டிருந்த இடைவெளிக்கு புதிய சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரின் பெயரினை ஆளும் கட்சி முன்னெமாழியவுள்ள நிலையில் இதற்கு மாற்றமாக எதிர்கட்சி ஒருவரின் பெயரினை தாங்கள் முன்னெமாழியவுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது –
ஆளும் அரசு தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை சொல்லி மக்களது வாக்குகளை பெற்றனர்.ஆனால் ஆட்சியின் பின்னர் அவர்களது வங்குரோத்து அரசியலை காணமுடிந்தது.
தூய்iமானவர்கள் என்று தங்களை காட்டியவர்களின் கல்வி நிலை தொடர்பில் சில நாட்களில் எம்மால் காணமுடிந்தது.இனியும் இவர்களது பட்டங்களை நம்ப முடியாயது.
எனவே தான் எமது அணியில் உள்ள தகுதிமிக்க ஒருவரை சபாநாயகர் பதவிக்கு பிரேரணை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் நளின் பண்டார இதன் போது கூறினார்.