• முகப்பு
  • இலங்கை
  • நாங்கள் மாறாத வரை நாட்டையும் மாற்ற முடியாது பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர்

நாங்கள் மாறாத வரை நாட்டையும் மாற்ற முடியாது பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர்

கண்டி நிருபர் ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Nov 28, 2024, 4:23:14 AM

நாங்கள் மாறாத வரை நாட்டையும் மாற்ற முடியாது என பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டப்ளியு. எம்.டி.மயுஜித் தெரிவித்தார். 

கண்டி மகாவலி ரீச் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் கண்டி உதவி இந்தியத் தூதுவர் வீ.எஸ்.சரன்யா தலைமையில் இடம் பெற்ற 'ஐடெக்' தின நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய தொழில் நுட்ப பொருளாதார கூட்டு நிறுவனம் சர்வதேச ரீதியில் பல வருடங்களாக பல்லாயிரக் கணக்கான மக்கள் நன்மையடையும் வித்தில் பல்வேறு நிகழ்வுகளை ஒழுங்கு செய்து வருகின்றது. அது தொடர்பாக விழிப் பூட்டும் வகையில் கண்டியில் மேற்படி ITEC நிகழ்வு இடம் பெற்றது.

இவ்வைபவத்தில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் மேலும் தெரிவிக்கையில்-

 ஒப்பீட்டு ரீதியில் இந்தியாக்கும் இலங்கைக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உள்ளன. இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தை இந்தியாவுடன் ஒப்பிடும் போது பல ஆயிரம் மடங்கு அது பெரியது. இலங்கையின் சனத் தொகையுடன் ஒப்புடும் போது பல நூறு மடங்கு இந்தியா அதிகமாக உள்ளது. இப்படி எல்லா வகையிலும் பாரி மாற்றம் உள்ளன. கல்வியைப் பொருத்த வரை நாம் சிறிய நாடாக இருந்தலும் இலவசமாக வழங்கு கிறோம். ஆனால் எம்மை விட பாரிய அளவில் வளர்ந்து காணப்படும் இந்தியா எமக்கு கல்வி உற்பட பல துறைகளில் உதவி வந்துள்ளன. கொவிட் காலத்தில் அவர்களது மருத்துவ உதவிகள் எண்ணிலடங்காது. 

இலங்கையில் ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் பட்டப்பின் படிப்பு போன்ற அனைத்தும் இலவசமாகப் பெற்றவர்கள் நாட்டுக்கு உதவுவது குறைவு. தமக்கு கல்வி வழங்கிய தாய் நாட்டுக்கு சுமை இன்றி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் வீதியில் இறங்கி தொழில் கேட்டு போராடு கின்றனர். அவர்கள் முதலீட்டாளர்களாகவும் தொழில் வழங்குனர்களாவும் மாற வேண்டுமே ஒழிய தமக்கு கல்வி வழங்கியவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது. தாம் மாறாத வரையில் நாடும் மாறாது என்றார். 

இங்கு உரையாற்றி மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் தெரிவித்ததாவது. மிக நீண்ட காலத்திற்கு முன் கணிதத் துறை தொடர்பான இந்தியக் கண்டு பிடிப்புகள் பிற்காலத்தில் பாறிய மாற்றங்களை கணிதத் துறையில் ஏற்படுத்தியது.கணித்தில் பல்வேறு பிரிவுகள் உண்டு.

புராதன காலத்தில் இருந்து இன்று வரை கேத்திர கணித்தில் (ஜோமெட்றி) பாரிய மாற்றங்கள் எதுவும் உலகில் ஏற்பட வில்லை. ஆனால் அட்சர கணி்தத்தில் (அல்ஜிப்ரா) பூச்சியம் என்ற வரி வடிவம் அறிமுகப்படுத்தியதன் ஊடாக அதன் தொழிற்பாடு கணித்த துறையில் பாரிய மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழி காட்டியது. இது ஒரு இந்தியக் கண்டு பிடிப்பாகும். இவ்வாறு இந்தியா உலக வரலாற்றில் பல அரிய சேவைகளைப் பிரிந்துள்ளது.

இன்று ஐடெக் திட்டத்தின் கீழ் பாரிய சேவைகளை செய்து வருகிறது. இதன் அடிப்டையில் இலங்கையைச் சேர்ந்த பலர் புலமைப் பரிசில்கள் பெற்று இந்தியாசிற்குச் சென்று தன்மை வளர்த்துக் கொண்டதுடன் மனித சமூகத்திற்கு சேவைகள் புரிந்து வருகி்ன்றனர். அதற்கு இன்றைய இந்நிகழ்வில் தமது அனுபவங்களை பலர் முன் வைத்ததை காணக்கூடியதாக இருந்தது என்றார்.

மேற்படி நிகழ்வில் கானச் சுடர் திவாகர் செல்வரட்னட் பிரதம அதிதியிடம் இருந்து பரிசுபெறுதையும், உதவித்தூதுவர் வீ.எஸ்.சரன்யா உரையாற்றுவதையும் கலந்துகொண்ட அதிதிகள் மற்றும் சபையோர்களின் ஒரு பகுதியையும் காணலாம்.

 

VIDEOS

Recommended