• முகப்பு
  • இலங்கை
  • ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் வெள்ள நீர் உட்புகுந்ததினால் தற்காலிக இடத்திற்கு மாற்றம்.

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் வெள்ள நீர் உட்புகுந்ததினால் தற்காலிக இடத்திற்கு மாற்றம்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

UPDATED: Nov 27, 2024, 6:23:44 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையைத்தொடர்ந்து மாவட்டத்தில் தாழ்நிலை பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது.

இதன் அடிப்படையில் ஏறாவூர் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் வெள்ள நீர் உட்புகுந்ததினால் பிரதேச செயலகம் தற்காலிகமாக ஏறாவூர் நகர சபை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended