• முகப்பு
  • இலங்கை
  • ஈரான் அதிபருக்கு மறைவான தொழுகை நடத்த உலமா சபை இலங்கை முஸ்லிங்களை பணிக்க வேண்டும் : ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான்

ஈரான் அதிபருக்கு மறைவான தொழுகை நடத்த உலமா சபை இலங்கை முஸ்லிங்களை பணிக்க வேண்டும் : ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 20, 2024, 10:44:48 AM

திடீர் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரைசி உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறித்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சி சார்பில், அவர்களது குடும்பத்தினருக்கும், ஈரான் நாட்டு மக்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என ஐக்கிய சமதான கூட்டமைப்பின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ. ஏ. கலீலுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 


அவரது அறிக்கையில் மேலும், ஈரானிய ஜனாதிபதி ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹி, கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலிக் ரஹ்மதி மற்றும் தப்ரிச் நகர மதத்தலைவர் இமாம் அலி அஸ் ஹாஷிம், தளபதி மஹ்தி மூஸவி ஆகியோருடன் இணைந்து உயிரிழந்த நான்கு பேருக்கு இலங்கை சமூகம் இரங்கல் தெரிவிக்கிறது. அவர்களுக்கு, இஸ்லாத்தின் உன்னதமான ஜன்னதுல் பிர்தௌஸ் கிடைக்க பிரார்திக்கிறோம்.

இலங்கை முஸ்லிம் சமூகம் அவர்களுக்காக கைப் ஜனாஸா தொழுது பிரார்த்தனை செய்வதற்கும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய அகில இலங்கை உலமா சபை ஆன்மீக வழிகாட்டலை வழங்க வேண்டும், குறிப்பாக எதிர்வரும் (24) வெள்ளிக்கிழமை, அரசியல் மற்றும் சிவில் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தை வெள்ளைக் கொடி ஏந்தியபடி இரங்கல் தெரிவிக்க வலியுறுத்த கேட்டுக்கொள்கிறேன்.


இன்னும் சொல்லப் போனால் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் உலக முஸ்லிம் தலைவர்களின் மரணத்தை இந்நாட்டு முஸ்லிம் தலைவர்கள் கையாண்டார்கள். இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரான் அதன் நிறுவனர், உச்ச ஆன்மீகத் தலைவரான கொமெய்னியால் ஆளப்படுகிறது, அவரது மரணத்திற்குப் பிறகு, அலி கமேனி தற்போதைய உச்ச ஆன்மீகத் தலைவராக இருக்கிறார்.

எனவே, உச்ச ஆன்மீகத் தலைவர் அலி கமேனியின் பரிந்துரையின் பேரில், ஈரானிய அரசியலமைப்பின்படி, துணை ஜனாதிபதி மொக்பர் எதிர்காலத்தில் ஈரானின் தற்காலிக அதிபராக செயல்பட உள்ளார், மேலும் ஈரான் மக்கள் 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி உட்பட ஈரானிய அரசாங்கம் அதன் உயர்ந்த ஆன்மீகத் தலைமையின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதால், இஸ்லாமிய உலகில் ஒரு சக்திவாய்ந்த நாடாக ஈரானின் துணிச்சலுக்கு யாராலும் சவால் விட முடியாது என்பதை நான் இங்கு கூறுகிறேன் என்று கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended