கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் மூவர் தெரிவு

கண்டி நிருபர். ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Nov 17, 2024, 4:01:14 PM

கண்டி மாவட்டத்தில் இம் முறை மூன்று முஸ்லிம் பிரதி நிதித் துவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

கண்டி மாவட்டத்தில் கடந்த பல தசாப்தங்களாக இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட முஸ்லிம் பிரதிநிதித் துவங்கள் இருந்து வந்துள்ளன. 1990 களின் பின்னர் ஏ.சீ.எஸ்.ஹமீத், ஏ.ஆர்.எம்.அப்துல் காதர், றவூப் ஹகீம், பைசர் முஸ்தபா என்ற பட்டியல் மாறிமாறி இடம் பிடித்துள்ளன. ஒரு முறை பைசர் முஸ்தபா இ.தொ.கா. சார்பாகப் போட்டி இட்டு வெற்றி பெற்றார்.

அதன் பின் அவர் கட்சிகள் தாவி வெற்றி பெற்ற சந்தர்ப்பங்களும் உண்டு.  

இம்முறை கண்டி மாவட்டத்தில் றவூப் ஹகீம் அவர்களும்(சஜப), தேசிய மக்கள் சக்தி சார்பில் றியாஸ் பாரூக்கும், மொகமட் பஸ்லானும் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் இம் முறை மூன்று முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

அதே நேரம் அக்குறணை, மடவல, உடுவநுர போன்ற முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் செல்வாக்குப் பெற்ற பலரை சுயேட்சைக் குழுக்களாக நிறுத்தி சுமார் 20 000 ற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்குகள் சிதரடிக்கப்பட்டுள்ளதாக பலர் கவலை வௌியிட்டனர்.

அவ்வாக்குகளளைக் கொண்டு பிரதான கட்சியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரை மேலும் வெற்றி அடையச் செய்திருக்க முடியும் எனப் பலர் கவலை தெரிவித்தனர்.

அதே நேரம் தமிழ் வாக்குகளும் பல்வேறு சுயேட்சைக் குழுக்களின் தலையீட்டால் குளறு படியாகியதால் தமிழ் பிரதிநிதித் துவத்தை காப்பாற்ற முடியாமற் போனதாக தமிழ் மக்கள் கவலை தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended