• முகப்பு
  • இலங்கை
  • வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

ஊடக பிரிவு

UPDATED: Nov 28, 2024, 8:16:21 AM

இந்த கூட்டம், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹாவின் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் P.A. சரத்சந்திர, பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

சீரற்ற காலநிலையினால் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்வதற்காக, சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், வெள்ளப்பாதிப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதன்போது, ரிஷாட் பதியுதீன், தொழிலுக்குச் செல்ல முடியாதவர்கள் மற்றும் வெளியேற முடியாமல் வீட்டிலேயே இருக்கின்றவர்களுக்கு தேவையான உணவு வழங்குவதில் சிரமங்கள் இருக்கின்றன என்று கூறி, அவர்கள் அடையாளம் கண்டு, அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை அரசின் சார்பற்ற அமைப்புகளின் உதவியுடன் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

மேலும், அவசர உதவிகள் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், வெள்ளப்பாதிப்பால் பாதிக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



 

VIDEOS

Recommended