உரிமைப்போராட்டம் தொடர்ந்து செல்கிறது! ரவிகரன்

வவுனியா

UPDATED: Oct 20, 2024, 5:08:48 AM

எங்களை காத்தவர்கள் இன்று மௌனிக்கப்பட்ட நிலையில் மக்களாகிய நாங்கள் எமது உரிமைக்காக போராடவேண்டிய நிலமை இன்னும் தொடர்வதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான து.ரவிகரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகbநிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. 

original/img-20241019-wa0029_copy_512x384
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

அபிவிருத்தியோடு எமது தீர்வைநோக்கி பயணிப்பதே எமது இலக்கு. ஆனால் எமது நிலம் இருந்தால் மாத்திரமே அந்த அபிவிருத்தியை செய்யமுடியும். எமது நிலம் எமது உரிமை. அது இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. 

இன்று வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் பாரிய நிலப்பரப்புக்கள் பறிபோய்க்கொண்டு இருக்கிறது. எமது போராட்டங்களின் ஊடக குறுகிய அளவைஎன்றாலும் நாம் காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம்

original/1729238822571
எமது மதத்தை அழித்து பௌத்தமதத்தை விஸ்தரிக்கவேண்டும்என்று இனவாதிகள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். பொலிஸ் இராணுவம் என நாட்டின் அனைத்து படைகளும் அவர்களுடையது. இந்த படைகள் கொஞ்சம் கூட நீதி நியாயம் இல்லாமல். பௌத்த மதத்திற்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமது விசுவாத்தினை காட்டும் நோக்கத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

அதற்கு மாறாக நாங்கள் களத்திலே நிற்கின்றோம்.எங்களை காத்தவர்கள் இன்று மௌனிக்கப்பட்ட நிலையில் மக்களாகிய நாங்கள் எமது உரிமைக்காக போராடவேண்டிய காலம் இன்னும் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். தீர்வுதான் கிடைக்கவில்லை.

மாற்றம் என்று கூறப்படும் இந்த ஆட்சி ஒருவருடத்தை கடந்தபின் தான் தெரியும் இதன் போக்கு எப்படி இருக்கிறது என்று.எனவே வடகிழக்கு தமிழர்தாயகம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். 

VIDEOS

Recommended