கண்டியில் இயங்கும் 'கரீடாஸ் நிறுவனம்' 2024 ற்கான சமாதான வேலைத்திட்டம்
ஜே.எம். ஹாபீஸ்
UPDATED: Jun 23, 2024, 2:43:34 AM
நாடாவிய ரீதியில் இயங்கும் 13 'கரீடாஸ்' நிறுவனங்கள் மூலம் பல்வேறு சமாதான வேலைத்திட்டங்கள் முன் எடுக்க்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பாக கண்டியில் இயங்கும் ‘கரீடாஸ் செட்டிக்’ நிறுவனம் 2024ம் ஆண்டுக்கான பல புதிய சமாதான வேலைத் திட்டங்களை முன் எடுக்க உள்ளதாக அதன் இணைப்பாளர் எஸ். சிவக்குமார் தெரிவித்தார்.
கண்டியில் அமைந்துள்ள ‘கரீடாஸ்’ நிறுவன கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற சர்வமத பிரமுகர்களது கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதில் ‘கரீடாஸ்’ நிறுவன பணிப்பாளர் அருட்தந்தை நியூமன் பீரிஸ், மஹய்யாவ அசோக்காராம விகாராதிபதி, மஹய்யாவ விநாயகர் கோவில் பிரதம குரு ஶ்ரீ ராம் குருக்கள், மஹய்யாவ காட்டுப்பள்ளி இமாம் ரிஸ்வான் மௌலவி உட்பட பல்வேறு மதத்ததலைவர்களும், மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சட்டத்தரணி பைசால் மொகமட் உற்பட செயற்பாட்டு அங்கத்தவர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய ‘கரீடாஸ்’ அமைப்பின் ‘செட்டிக்’ பிரிவு இணைப்பாளர் சிவக்குமார் மேலும் தெரிவித்தாவது-
கடந்த காலங்களில் எம்மால் நாடலாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்கள் முன் எடுக்கப்பட்டு பொதுமக்களது வரவேற்பை பெற்றிருந்தது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சிறிது காலம் அவை தடைப்பட்டிருந்தன. தற்போது சுமுகமான நிலை ஏற்பட்டுள்ள காரணததால் பல்வேறு புதிய சமதான, சகவாழ்வு வேலைத்திட்டங்களை முன் எடுத்துள்ளோம். அது தொடர்பான கலந்துரையாடலையே தற்போது மேற்கொண்டு வருகிறோம். பெருந்தோட்டப் பகுதிகளில் எமது விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் வெற்றி அளித்துள்ளன என்றார்.
இங்கு உரையாற்றிய ரிஸ்வான் மௌலவி தெரிவித்ததாவது-
பல்வேறு சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் மத ஒற்றுமை மிக முக்கியம், புத்த பெருமான் இலங்கை்கு மூன்று முறை விஜயம் செய்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. அதில் இரண்டு முறை அவர் மக்களுக்கு மத்தியில் இருந்த குழப்ப நிலைகளை இல்லாது ஒழிக்க வந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இது இலஙகையில் பௌத்த மத்தின் ஆரம்பக் கட்டமாகும்.
அதேபோல் அரேபியாவில் தோன்றிய நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் குலப்பிரிவுகள் மற்றும் கோத்திரங்களுக்கு இடையே இருந்த குழப்ப நிலைமையை முதலில் நீக்கினார். இதனையே ஏனைய மதங்களும் செய்துள்ளன என்றார்.
2024ம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது.