• முகப்பு
  • இலங்கை
  • நிஷாம் காரியப்பரின் அந்த கல்முனைக்குடி நாட்கள் நூல் வெளியீடு

நிஷாம் காரியப்பரின் அந்த கல்முனைக்குடி நாட்கள் நூல் வெளியீடு

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Jul 21, 2024, 7:06:15 AM

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரனி நிசாம் காரியப்பர் தமிழ் மொழி மூலமாக எழுதிய ” அந்த கல்முனைக்குடி நாட்கள் .”எனும் கவிதைத் தொகுப்பு  பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிட்டு வைபவம் நடைபெற்றது.

original/inshot_20240721_122608076

இந் நிகழ்வுக்கு அதிதிகளாக உயர் நீதிமன்ற நீதியரசர் திலிப் நவாஸ், கலந்து கொண்டார் அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் கல்முனை கவிஞர் , சோலைக்கிளி அத்தீக், முன்னாள் வெளிநாட்டுத் துாதுவர் எச்.ஏ அஸீஸ் மற்றும் நூலாசிரியர் நிசாம் காரியப்பர் ஆகியோர்கள் உரையாற்றினார்கள். நூலின் முதல் பிரதியை நூலாசிரியரால் தனது தாய்க்கு வழங்கி வைத்தார். அத்துடன் சகலருக்கும் இலவசமாக நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய ரவூப் ஹக்கீம் { பா. உ}: -

நிசாம் காரியப்பர் சிங்கள மொழி மூலம் கல்வி கற்று தனது தொழில் துறையை ஆங்கிலத்தில் செயலாற்றும் ஒருவர் அதுவும் தமிழ் மொழி மூலம் அவர் கவிதையாற்றிருப்பது மிகப்பெரிய சாதனையாகும். எனக்குக் கூட சிங்களம் பேசினாலும் அதில் கவிதை எழுதுவது என்பது முடியாத காரியமாகும். 

 மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவரின் பாசறையில் வளர்ந்த நிசாம். காரியப்ப்ம் தலைவரின் மருகளையே திருமணம் முடித்துள்ளார். அவரின் கவிதைக்கு அவரது மனைவியின் உதவி கட்டாயம் கிட்டியிருக்க வேண்டும். எனக் கூறினார்

வெளிநாட்டு இராஜதந்திரி எச். ஏ அஸீஸ் அங்கு உரையாற்றுகையில் தமிழ் இலக்கிய பரப்பில் நிசாம் காரியப்பர் எழுதிய கவிதைகள் ஒரு தொகுப்பாக வெளிவருவது வரவேற்கத்தக்கதாகும்.

 இத்தொகுப்பு பல ஆண்டுகளாக அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட காத்திரமான கவிதைகளை உள்ளடக்குகின்றது. நிசாம் இந்த நாட்டில் பேசப்படும் மூன்று மொழிகளும் நன்கு தெரிந்தவர் அவரது தாய் மொழியாக தமிழ் பாடசாலைக் கல்வி மொழியாக சிங்களம் தொழில் வாண்மை மற்றும் சமூகங்களுக்கிடையிலான பரிமாற்ற மொழியாக ஆங்கிலமும் அமைந்துள்ளன. என உரையாற்றினார்.

பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் 

நிசாம் காரியப்பர் கவிதைகள் எனப் பேசத்தக்க தேர்ந்த கவிதைகள் இத்தொகுதியில் உள்ள கவிதைகள் தனித்துவ மொழி ஆளுமையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் ஆரம்பக்கல்வியை பாடசாலைக் கல்வியும் சிங்களமொழியின் படித்த ஒருவர் தாய்மொழியில் இத்துணை சாரமிக்க கவிதைகள் தனித்து மொழி ஆளுமையுடன் செயலாற்றுவது பாராட்டு க்குறியது.

 

VIDEOS

Recommended