இரு பாராளுமன்றத் தேர்தலில் கம்பஹா மக்கள் எனக்கு வாக்களித்து பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 26, 2024, 7:18:21 PM
2015 க்கும் 2020 க்கும் இடையில் நடந்த உள்ளுராட்சி மன்றத் தெர்தலில் வத்தனை – மாபோல நகர சபைக்கு அதிகப்படியான மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டது மட்டுமல்ல அந்த சிறிய உறுப்பினர் பதவியினைக் கொண்டு என்னால் ஆன அதி கூடிய பணிகளை செய்துள்ளேன் இதே போன்று பாராளுமன்ற உறுப்புரிமையினை நீங்கள் வழங்குவீர்கள் என்றால் எனது பணி அதனைவிட பன்மடங்காகும் என்று கம்பஹா மாவட்ட ஜக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்பாளர் எஸ்.சசிகுமார் தெரிவித்தார்.
பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.விஜயகுமார் தலைமையில் அவரகொடுவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில் -
இரு பாராளுமன்றத் தேர்தலில் கம்பஹா மக்கள் எனக்கு வாக்களித்து பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.அவர்கள் எனக்கு வாக்களிக்காமல் உங்களது சேவை போதும் என்று தெரிவித்திருந்தால் நான் அரசியலில் இருந்து விடைபெற்று இருப்பேன்.இன்னும் எமது சேவை என எதிர்பார்க்கின்றனர்.
இந்த மக்கள்,இதனை இம்முறை நிச்சயமாக நிறைவேற்றக் கிடைக்கும் என்ற நம்பிக்கையினை மக்கள் கொடுத்துள்ளனர்.
ஊழல்,ஏமாற்று போன்ற செயற்பாடுகள் அற்ற எமது மாவட்ட,தேசிய தலைகைளுடன் நாங்கள் ஒன்றித்து பயணிக்கின்றோம்.
அன்று வெறும் நகர சபை எல்லைக்குள் மட்டும் முடக்கப்பட்ட எமது அபிவிருத்திகளை எதிர்காலத்தில் பறந்துபட்டு செய்வதற்கு உங்களது ஆணையினை கோறி நிற்கின்றேன் என்றும் அவர் இதன் போது கூறினார்.