அதிபர் ஆசிரியர் ஒன்றிய ஆர்ப்பாட்டத்தால் கொழும்பில் பதற்ற நிலை
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: Jun 26, 2024, 12:24:34 PM
சம்பள முரண்பாடு, பதவி உயர்வு புதிய கல்விச் திருத்தம் என்ற போர்வையில் இலவச கல்விக்கு எதிரான செயல்பாடு,அதுபோன்று மாணவர்களிடம் பணம் அறவிடுதல் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அதிபர் ஆசிரியர்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியது.
தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருமாறு கோரி இன்று அதிபர்களும்,ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு பிரதான புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர முற்பட்ட போது போலீசார் மற்றும் ராணுவம்,கடற்படை,கழகம் அடக்கும் போலீசார், விசேட அதிரடிப்படையினர் அவர்களை தடுத்து நிறுத்திய போதும் அதனையும் மீறி அவர்கள் அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி முன்னேறிச் சென்றார்கள்.
ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் பிரதான பகுதிக்கு நுழைய முற்படுசையில் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுப்பதற்கு முயற்சி செய்தனர். இதற்கென பல அடுக்கு பலிசார்களைக் கொண்ட அரன்களை ஏற்படுத்தினர். அதனையும் உடைத்தெறிந்து முன்னேறுவதற்கு முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எரிந்தும் அது போன்று தண்ணீரை பீய்த்தடித்தும் கலைக்க முற்பட்டபோதும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் போலீசாரு டன் முரண்பாட்டில் ஈடுபட்டதை காண முடிந்தது.
இந்த நிலையில் கொழும்பின் பிரதான பகுதியான கொழும்பு கோட்டை பகுதி பதற்ற நிலைக்கு உள்ளாகி இருந்தது.
இதனை அடுத்து பீதியை மறைத்து தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்த நிலையில் அதிபராசரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையினை அடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.