இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு வாழ்த்து தெரிவிப்பு
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Nov 29, 2024, 5:12:18 PM
நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகைகள் தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு தன்னுடைய ஆசியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு சிவசேனா அமைப்பின் செயல்நிலை தலைவர்எஸ்.சசிகுமார்.
இது தொடர்பில் அவர் ஒலி வடிவம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் சார்பில் குரல் கொடுக்கக்கூடிய துணிவு மிக்க ஒரு தலைவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை இந்த தமிழ் பேசும் முழு சமூகத்துக்கும் கிடைத்த நன்மை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ | நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தன்னுடைய நல்ல நண்பர் என்றும் தமிழ் மக்களுக்காக என்றும் தொடர்ந்தும் குரல் கொடுப்பார் என்றும் தமிழக மக்களது வாழ்த்துக்களும் ஆசியையும் அவருக்கு தெரிவிப்பதாக தமிழ்நாடு சிவசேன அமைப்பின் செயல்நிலை தலைவர் எஸ் சசிகுமார் மேலும் குறிப்பிடுகிறார்.