• முகப்பு
  • இலங்கை
  • சென்னை எருக்கஞ்சேரியில் நடைபெற்ற விருது விழாவில் இலங்கை எழுத்தாளர் பாரா தாஹிருக்கு பல விருதுகள்

சென்னை எருக்கஞ்சேரியில் நடைபெற்ற விருது விழாவில் இலங்கை எழுத்தாளர் பாரா தாஹிருக்கு பல விருதுகள்

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Nov 2, 2024, 6:49:57 AM

சென்னை எருக்கஞ்சேரியில்  தமிழ் தொண்டன் பைந்தமிழ்ச் சங்கம் மற்றும் நிலா வட்டம் இலக்கிய அமைப்புகள் இணைந்து நடாத்திய கவிஞர் ஜாகிர் உஷேன் அவர்களின் இரட்டை நோபல் உலக சாதனை விழாவில் ஐயாயிரம் மழலைப் பாடல்களைக் ஒரே நூலாக வெளியிடும் நிகழ்வு இடம் பெற்றது.

தனது ஐம்பது மழலைப் பாடல்களையும் இணைத்து பங்களிப்பு செய்தமைக்காக எழுத்தாளரும்,கவிஞரும் ,ஊடகவியலாளரும்,சமூக சேவைகியுமான மாவனல்லை பாரா தாஹீர் அவர்கள் "தமிழ் நேசன்", கவிச் சுடர்,கவித் தென்றல் ஆகிய பட்டங்கள் வழங்கி,விருது வழங்கி ,உலக சாதனையாளர் நற் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

original/img-20241018-wa0014_copy_386x512_1
ஐயாயிரம் மழலைப் பாடல்கள் அடங்கிய "கவித்தேன் தூளி "நூலில் இவரது"சின்னஞ் சிறு தாரகைகள்"எனும் தலைப்பிலான ஐம்பது மழலைப் பாடல்கள் உள்வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியா,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் கவிஞர்கள் பங்கு பற்றிய இவ் நிகழ்வில், இவருக்கான உலக சாதனை விருதுகள் வட சென்னையிலுள்ள வீ.ஏ.எம். மஹால் எனும் அரங்கில் வைத்து வழங்கப்பட்டது.

original/img-20241023-wa0131_copy_432x432_1
இதே வேளை இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவரும், த கிரேட் இந்தியா நியூஸ் வெப்தலத்தின் இலங்கை மாவனல்லை பிராந்திய செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பெற்ற இந்த விருதுக்கு தகி ரேட் இந்தியா நியூஸ் தங்களுடைய முழுமையான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

VIDEOS

Recommended