இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Dec 13, 2024, 1:02:49 PM
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2024 டிசம்பர் 15-17 தேதிகளில் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கையில் சமீபத்தில் முடிவடைந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு விஜயம் இதுவாகும் என்று இலங்கையில் உள்ள இநதிய உயர் ஸ்தானிகர் ஆலயம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி திஸாநாயக்க தனது விஜயத்தின் போது, ராஷ்டிரபதி ஜியை சந்தித்து, பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு விவகாரங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முதலீடு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதற்காக டெல்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்விலும் ஜனாதிபதி திசநாயக்க பங்குபற்றுவார். மேலும், பயணத்தின் ஒரு பகுதியாக அவர் போத்கயாவுக்குச் செல்கிறார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) இந்தியாவின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கை, பிரதமரின் பார்வையான ‘சாகர்’ (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) மற்றும் இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ கொள்கை ஆகியவற்றில் ஒரு மைய இடத்தைப் பிடித்துள்ளது.
ஜனாதிபதி திசாநாயக்கவின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.