நானாட்டான் பிரதேச மக்களுக்கு நிவாரனப்பணி

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Nov 28, 2024, 3:35:38 PM

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய வெள்ள நிலையினை அடுத்து மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அறுவைகுண்டு மற்றும் மடுக்கரை பிரதேச மக்கள் இடம் பெயர்வுக்குள்ளாகி இருக்கின்றனர்.

 இவ்வாறு இடம் பெயர்ந்த குடும்பங்கள் நானாட்டான் பிரதேச கட்டிட மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களை பார்வையிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் வைத்தியர் மிக்தா, ரியாஜ் பதியுதீன் உள்ளிட்டவர்கள் அம்மக்களுக்கு உணவுகளையும் வழங்கியுள்ளனர்.

 

VIDEOS

Recommended