• முகப்பு
  • இலங்கை
  • ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு

ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Nov 19, 2024, 10:41:03 AM

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பத்தரமுல்லையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனநாயக முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றிற்கு கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானியில் வெளியிட்டது.

இந்நிலையில் அவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்புகள் வெளியாகிவரும் நிலையில், இந்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

 இதே வேளை ரவி கருணநானாயாக்கவின் நியமனம் பிழையானது என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

 

VIDEOS

Recommended