• முகப்பு
  • இலங்கை
  • சர்வதேச தாதியர் தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

சர்வதேச தாதியர் தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 12, 2024, 11:28:36 AM

 

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்று (12) நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்- 

ஏற்றுமதிப் பொருளாதாரத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை விரைவான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் பயணத்தில் நான்கு பிரதான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அவற்றில் முதலாவது மத்திய வங்கிக்கு சுதந்திரம் வழங்குவதற்கான மத்திய வங்கிச் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ,கடன் முகாமைத்துவச் சட்டம், அரச நிதிச் சட்டம் மற்றும் பொருளாதார பரிமாற்றச் சட்டம் உள்ளிட்ட சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த சட்டங்களை நிறைவேற்றறுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



 

 

 

VIDEOS

Recommended