• முகப்பு
  • இலங்கை
  • ஐனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு சர்வமத தலைவர்கள் வாழ்த்து

ஐனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு சர்வமத தலைவர்கள் வாழ்த்து

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Sep 25, 2024, 1:16:28 AM

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு தேசிய சர்வ மத குரு ஒன்றியத்தின் சர்வமத தலைவர்களான கெளரவ சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்ஸி நாயக தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி மற்றும் அருட்தந்தை டாக்டர் நிஷான் சம்பத் குரே பாதிரியார் ஆகியோர் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

original/img-20240925-wa0002_copy_362x512

ஒரு நாட்டை வழிநடத்துவது இலகுவான காரியமல்ல ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமை இலங்கைக்கு மிகவும் ஆழமான அமைதி, சகவாழ்வு, மத நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று நம்புவதுடன், ஜனாதிபதி அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மிக முக்கியமானவை. கடந்த கால படிப்பினைகளிலிருந்து தங்களுக்கு முன் அதிகாரத்தில் இருந்தவர்களின் வெற்றி தோல்விகள் இரண்டையும் பிரதிபலிப்பார்கள் என்று நம்புகிறோம். உண்மையான சவால் தேர்தலில் வெற்றி பெறுவது அன்றி , புத்திசாலித்தனமாக ஆட்சி செய்வதும், மக்களின் தேவைகளுக்கு உண்மையாக இருப்பதும்தான் உண்மையான சவால் என்பதை வரலாறு நமக்குப் நிரூபித்திருக்கிறது.

கடந்த கால தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை கண்டுகொள்ளாமல், உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்கான வாய்ப்பை தவறவிட்டனர்.

ஆனால் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களும் அவரது அரசாங்கமும் இந்த கடந்த கால தவறுகளில் இருந்து கற்ற பாடங்களுக்கு அமைவாக வெளிப்படைத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் நீண்டகால நன்மைக்காக அர்ப்பணிப்புடன் வழிநடத்துவார்கள் என்றும் நம்புவதுடன், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் அவரது அரசாங்கம் இலங்கையை முன்னோக்கி செல்ல எடுக்கும்


முயற்சிகளில் வெற்றிபெற சர்வமத மதத்தலைவர்கள் என்ற வகையில் தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

 

VIDEOS

Recommended