இந்த வருடத்தின் விஷேட வெசாக் கொண்டாட்டங்களில் ஒன்றான ‘தியவன்னா வெசாக் வலயம் 2024’ வெற்றிகரமாக நிறைவடைந்தது
Irshad Rahumathulla
UPDATED: May 27, 2024, 11:08:21 AM
Diyawanna Vesak 2024
பாதுகாப்பு அமைச்சினால் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024ஆம் ஆண்டுக்கான தியவன்னா வெசாக் வலயம் நிகழ்வுகள் மே 23 முதல் மூன்று நாட்கள் நடைபெற்று நேற்று மாலை நிறைவடைந்தது.
Live Sri Lanka News
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் திரு சுதர்ஷன குணவர்தன ஆகியோர் ‘தியவன்னா வெசாக் வலயம் 2024’ஐ முதல் நாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த வெசாக் பண்டிகை கொண்டாட்டங்களில் மத வேறுபாடின்றி பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்ல பாதுகாப்பு அமைச்சின் வீதியில் அலங்கரிக்கப்பட்ட வெசாக் விளக்குகள் மற்றும் வண்ண விளக்குகள் கடந்த வியாழன் (மே 23) இரு சிறப்பு விருந்தினர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம் செய்யப்பட்டது.
மேலும், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் மூலம் ‘தியவன்னா வெசாக் மண்டலம் 2024’ இன் நேரடி ஒளிபரப்பும் ஒரே நேரத்தில் தொடக்க நாளில் இருந்து ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கலாசார குழுவினரால் நிகழ்த்தப்பட்ட பக்தி கீ (மத பக்தி பாடல்கள்) மூலம் தியவன்னா வெசாக் வலயம் விஷேட சிறப்பினை ஏற்படுத்தியது.
Sri Lanka News and Updates
இரண்டாம் நாள் (மே 24) நிகழ்வில் கலந்து கொண்ட பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர் வெசாக் வலயத்தை சம்பிரதாயபூர்வமாக ஒளிரச் செய்தனர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் மூன்றாம் நாள் (மே 25) வெசாக் வலயத்தை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஒளியேற்றினார் மற்றும் தியவன்னா வெசாக் வலய 2024 இல் மிகவும் ஆக்கப்பூர்வமான வெசாக் விளக்குக்கான பணப் பரிசில்களையும் இதன்போது வழங்கினார்.
இதன்படி, இலங்கை இராணுவப் பொறியியலாளர்கள் படையணியினால் வடிவமைக்கப்பட்ட வெசாக் விளக்கு முதலாம் பரிசைப் பெற்றதுடன், இலங்கை இராணுவ ஆயுதப் படையணி இரண்டாவது பரிசினை பெற்றுக்கொண்டது. இலங்கை விமானப்படையின் பாலாவி நிலையம் மூன்றாம் இடத்தை வென்றது. நெஸ்லே லங்கா நிறுவனம் பரிசுகளுக்கு அனுசரணை வழங்கியது குறிபிடத்தக்கது.
ALSO READ | காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
‘’மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதைவிட நாம் என்ன செய்தோம் என்பதில் விழிப்புடன் இருப்போம்’’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வுகள், தியவன்னா வெசாக் வலயத்தில் வெசாக் விளக்கு கண்காட்சி, பக்தி கீ, வெசாக் தன்சல் விற்பனை நிலையங்கள், மூலிகை தேநீர் கடைகள், ஒளி அலங்காரங்கள், அலங்கரிக்கப்பட்ட மொபைல் பக்தி கீ மேடை மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.