வடக்கு தமிழ் மக்கள் இணக்கம் அரசியலை விட சரணாகதி அரசியலையே விரும்புகின்றனர்- பாபுசர்மா தெரிவிப்பு
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Nov 30, 2024, 10:02:33 AM
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அனுர அலை இலங்கை முழுவதும் வீசியது. மக்கள் தங்கள் வாக்கினை அனுர அரசுக்கு அள்ளி குவித்தர்கள் இம்முறை தமிழ் மக்களில் பெரும்பாலானோர் மனதில் எழுந்த ஆச்சரியம் வடக்கு பகுதியில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் 25000 வாக்குகளை பெற்ற தற்போதைய ஜனாதிபதி அனுராகுமார திசா நாயகவிற்கு பாராளுமன்ற தேர்தலில் மூன்று மடங்காக வாக்கு வங்கி அதிகரித்து என்று கலாநிதி பாபு சார்மா தெரிவிக்கின்றார்.
சுமார் 80,000 வாக்குகளை பெற்று மூன்று வடக்கு மாகாண குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றதுதான் பெரும் ஆச்சரியமாக தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது. பொதுவாகவே யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு அரசியலையே செய்து வந்தார்கள் அதேவேளை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இணக்கப்பாட்டு அரசியலையே செய்து வந்தார்
அதேநேரம் இணக்கப்பாட்டு அரசியலுக்கு தமிழ் மக்கள் பெரும் ஆதரவு கொடுத்ததாக தெரியவில்லை எனினும் டக்ளஸ் தேவானந்தா முப்பது வருடமாக அந்த சேவையை செய்து வந்தார். இம்முறை எதிர்பாரத விதமாக அரசுடனே சேர்ந்து தங்கள் வருங்கால அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துடன் யாழ் மாவட்ட மக்கள் அனுர அரசுக்கு வாக்களித்து இணக்க அரசியலைவிட சரணாகதி அரசியலே சிறந்தது என்ற உணர்வுடன் வாக்களித்தாதாக அரசியல் அவதாணிகள் கருத்துவதாக பாபுசர்மா தெரிவித்துள்ளார்.
எனவே வருங்காலம் இணக்க அரசியலை விடுத்து சரணாகதி அரசியலை நோக்கி பயணிக்கலாம் என்ற கருத்தை பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கும் ஏணைய கட்ச்சிகளுக்கும் எடுத்துக்காட்டுகின்றது.
மேலும் யாழ்ப்பாணத்தில் மிகவும் கூடுதலான வாக்குகளை பெற்ற தனியான ஒரு கட்ச்சியாக அனுரவின் தேசிய மக்கள் சக்தி மேல் எழுந்ததன் மூலம் ஏணைய தமிழ் கட்ச்சிகளின் மத்தியில் தேசிய மக்கள் சக்தி ஒரு தடுமாற்றதை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தமிழ் தேசியத்தை பேசும் வடக்கு மாகணத்தில் இப்போது அனுர அலைதான் பொங்கி இருக்கிறது. இது நிச்சயம் தமிழ் கட்ச்சிகள் மத்தியில் அல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் வெள்ளிடைமலை.