• முகப்பு
  • இலங்கை
  • மாத்தளை மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மாத்தளை மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான்

அமைச்சரின் ஊடகப்பிரிவு

UPDATED: Jun 21, 2024, 6:41:52 PM

மாத்தளை மாவட்டத்திற்கான நேரடி விஜயம் மேற்கொண்ட நீர் ழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மத வழிபாடுகள் உட்பட பாடசாலைகளுக்கான கள விஜயங்களையும் மேற்கொண்டார்.

இதன் போது மாத்தளை நர் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு சென்று அங்கு பூஜை வழிபாடுகளில் கலந்துக்கொண்டார். இதேவேலை ஆலய நிர்வாக சபையினருடனன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

original/inshot_20240621_214530150
குறிப்பாக ஆலயத்திற்கான அறநெரி கல்வியை முன்னெடுத்துச்செல்வதற்கு குறைபாடாகக் காணப்பட்ட கட்டிட வசதிகளை தனது அமைச்சினூடாக நெறிப்படுத்தி தருவதாக நிர்வாக சபையினரிடம் தெரிவித்தார். அத்துடன் ஆலய நினைவுப் புத்தகத்தில் தனது கருத்து பதிவினையும் பதிவிட்டார்.

தொடர்ந்து மாத்தளை கல்வி வலயத்திற்குற்பட்ட மாத்தளை இந்துக் கல்லூரி, பாக்கியம் தேசிய கல்லூரி, கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைளுக்கான விஜயங்களையும் மேற்கொண்டார்.

இதில் மாத்தளை இந்துக் கல்லூரி மாணவர்களின் நீண்டகால தேவைப்பாடாக இருந்துவந்த ஒன்றுகூடல் கட்டிடம் அமைப்பதற்காக தனது அமைச்சு நிதியிலிருந்து நேரடியாக 05 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக ஆசிரியர், மாணவர்களிடம் தெரிவித்தார்.

மேலும் பாக்கியம் தேசிய கல்லூரியின் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் முன்னால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களால் ஆரம்பித்துவைத்த பாடசாலை ஒன்றுகூடல் பிரதான மண்டப நிறைவு பணிகளுக்கான 130 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கட்டிட பணிகளை விரைவாக முன்னெடுத்து பூர்த்திசெய்து பாடசாலையின் பயண்பாட்டிற்கு கையளிக்குமாறு பணிப்புறைவிடுத்தார்.

அத்துடன் பழைய மாணவர் சங்கத்தினரால் அமைச்சருக்கு நினைப்பரிசு வழங்கி வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மூன்றாவதாக கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் சென்றிருந்த அமைச்சர் பாடசாலை சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரின் வேண்டுகோளிற்கு இனங்க திரன் வகுப்பறையினை தான் பெற்றுத்தருவதாகவும், இதனை இலங்கை இந்திய சமுதாய பேரவையின் பங்களிப்பினூடாக பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.

இதில் விசேடமாக கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் பாத்திமா நுஹா என்ற மாணவி சதுரங்க போட்டியின் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்று மாகாணத்திற்கும், பாடசாலைக்கும் பெறுமைச்சேர்த்தவராவர். எனவே குறித்த மாணவியுடன் அமைச்சர் சதுரங்க போட்டியில் பங்குப்பற்றியதுடன், வெற்றிப்பெற்ற மாணவிக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துக்கொண்டார்.

இந் நிகழ்வில் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜுவன் தொண்டமான், மாத்தளை மாவட்ட இ.தொ.கா உபத்தலைவர் சிவஞானம், முன்னாள் மாத்தளை மாநகர சபை தலைவர் சாந்தனம் பிரகாஷ் இ.தொ.கா பிரமுகர்கள் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் பாடசாலைல மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended