• முகப்பு
  • இலங்கை
  • ஆளுநருக்கும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையான அனர்த்த முகாமை தொடர்பான சந்திப்பு

ஆளுநருக்கும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையான அனர்த்த முகாமை தொடர்பான சந்திப்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Nov 29, 2024, 1:45:04 PM

இன்று (29.11.2024) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர, மாவட்ட அரசாங்க அதிபர். திருமதி. ஜஸ்டினா முரளிதரன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. ஸ்ரீநேசன், இ. ஸ்ரீநாத் ஆகியோருக்கிடையிலான கூட்டமொன்று இடம்பெற்றது.

இதில் அனர்த்த முகாமைத்துவ உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற பிரதி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் பற்றி பேசப்பட்டது.

 மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பினாலும் கூட பல விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அநேகமான பாலங்கள், பாதைகள் போன்றன சேதமடைந்துள்ளன. இதனை புனரமைப்பு செய்வதற்குரிய ஆயத்தங்கள் மிக விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க வருகின்ற திங்கட்கிழமை (02.12.2024) காலை 10.00 மணிக்கு மாவட்ட மட்டத்தில் அனைத்து திணைக்கள அதிகாரிகளையும் இணைத்து கூட்டமொன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனூடாக பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனர்த்த முகாமைத்துவக் குழுவினரால் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்ட போதும்; அத் தொகையினை முறையான விதத்தில் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

 அத்துடன் வெள்ள நேரங்களில் படுவான்கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும் வேலைத்திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர்களே முன்முன்னெடுக்க வேண்டியிருந்தது.



VIDEOS

Recommended